Breaking News

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் எந்த நடைமுறையில் வழங்கப்படும்? TRB CM CELL Reply.


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வணக்கம்.2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றுமொரு நியமனத்தேர்வு நடத்தி பணி வழங்க அரசாணை அன்றைய அ.தி.மு.க அரசால் வெளியிடப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. அந்த அரசாணையை அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய நமது முதல்வருமான ஐயா திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளிட்டார்கள். மேலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கூறினார்கள். ஆகவே ஐயா அவர்கள் கூறியது போல் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படுமா ? அல்லது நியமனத்தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுமா ? என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நியமனத்தேர்வு மூலம் பணி வழங்கும்பட்சத்தில் அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தினை விரைந்து வெளியிட்டால் 10 வருடங்களாக இதனை நம்பியே வாழ்க்கையை தொலைத்த எங்களுக்கு தேர்வுக்கு முயற்சிக்கவாவது ஒரு அதிகபட்ச நேரம் கிடைக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

CM CELL Reply :

நிராகரிக்கப்படுகிறது . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிதெரிவிற்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியாகும் . அரசாணை எண் .149 ப.க. ( ஆதேவா ) துறை , நாள் .20.07.2018 - ன் படி போட்டித் தேர்வின் மூலம் தெரிவுப்பணி மேற்கொள்ளப்படும். இத்தெரிவு குறித்த அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் பொழுது பார்வையிட்டு | விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. 

ஆ.தே.வா.ஓ.மு.எண் .9435 / E5 ( S1 ) / நாள் .13.12.2021 .

No comments