Breaking News

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் பாடத்தாள் கட்டாயம்!

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் பாடத்தாள் கட்டாயம்!

TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் தமிழ் மொழிப்படங்களில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

40 மதிப்பெண்:

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள்TNPSC தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று TNPSC தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அரசு மொழிப்பாடத்தில் 40 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வில் இடம்பெறும் 100 தமிழ்மொழிப்பாட வினாக்களில் 40 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பிற வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. குரூப் 2 தேர்வுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். குரூப் 4 தேர்வை பொறுத்தவரை 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

குரூப் 2 தேர்வுக்கு 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதனை தொடர்ந்து இந்த இரண்டு தேர்வுகளுக்கும் அரசால் அறிவிக்கப்பட்ட விதிகளின் கீழ் இதர பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். இந்த இரண்டு தேர்வுகளும் விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகும் அனைவரும் தமிழ்மொழிப்பாடம் குறித்த முழு விபரங்களையும் அறிந்துகொண்டு பின்னர் தேர்வுக்கு தயாராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments