வரப்போகும் வருடம் இனிமையாக அமைய வருடம் முதல் நாள் செய்ய வேண்டிய சிறப்பு காரியங்கள் :
முதல், முதன்மை இது
போன்ற வார்த்தைகள் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. எந்த ஒரு
போட்டியிலும் முதலிடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கும். பரீட்சையிலும்
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும், எங்கு சென்றாலும் நான் தான்
முதலில் இருக்க வேண்டும், இவ்வாறு முதல் என்பது மிகவும் முக்கியமான ஒரு
விஷயம் ஆகும். அது போல வருடத்தின் முதல் நாள் என்பதும் பலரின் வாழ்க்கையில்
ஒரு முக்கியமான தருணம் ஆகும். இப்படி முதலில் துவங்கும் காரியத்தை
அனைவரும் மிகவும் கவனமாக தான் துவங்குவார்கள்.
முதல் கோணல் முற்றிலும்
கோணல் என்பார்கள். அவ்வாறு சரி என்றாலும் தவறு என்றாலும் வருடத்தின் முதல்
நாள் நாம் எதைச் செய்கிறோமோ அது தான் நமக்கும் தொடர்ந்து நடக்கவிருக்கும்.
எனவே இந்த வருடத்தின் முதல் நாளை எப்படி துவங்கினால் நமது வாழ்க்கை
இனிமையாக அமையும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்
போகின்றோம்.
நம் வழக்கப்படி தமிழ் வருடப்பிறப்பு என்பது நமக்கு சிறப்பு வாய்ந்த
தினமாகும். எனினும் பல வருடங்களாக நம் மக்கள் இந்த ஆங்கில புத்தாண்டை
மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். எனவே ஆங்கிலப் புத்தாண்டின்
முதல் நாளும் ஒருவருடைய வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும் முதல் நாளாக
கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை
மற்றவருக்கு தெரிவித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில் நாம் செய்யப்போகும் காரியங்கள் அந்த வருடம் முழுவதும் நமக்கான பலனைக் கொடுக்க வல்லது. அவ்வாறு காலை எழுந்தவுடன் நல்ல படங்களை பார்க்க வேண்டும். அதாவது இறைவன், இயற்கை, குழந்தை இவை இருக்கும் படங்களை பார்ப்பது மிகவும் நன்மையாகும். அல்லது உங்கள் செல்போனில் தீபம் எரியும் ஒரு காட்சியையும் படமாக்க வைத்துக் கொண்டு அதனைப் பார்ப்பதும் மிகவும் நன்மையாகும். அடுத்ததாக ஒரு பக்கெட் தண்ணீரில் சிறிதளவு பன்னீர், சிறிதளவு வாசனை மலர்கள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் 10 சொட்டு பால் இவை அனைத்தையும் கலந்து வைக்க வேண்டும். பின்னர் குளித்து முடித்தவுடன் இறுதியாக இந்த தண்ணீரை தலைவழியாக ஊற்றி குளித்து முடிக்க வேண்டும். பிறகு பூஜை அறையில் ஊதுபத்தி ஏற்றி இறைவனை வணங்க வேண்டும். அதன் பின் நேராக சமையலறைக்கு சென்று ஒரு ஸ்பூன் தேன் அல்லது சிறிய துண்டு வெல்லம் அல்லது அரை ஸ்பூன் சர்க்கரை இப்படி ஏதேனும் ஒரு இனிப்பு வகையை உண்ண வேண்டும். இவை அனைத்தையும் காலை எழுந்த உடனே யாரிடமும் பேசாமல், கவனத்தை சிதறவிடாமல், முழுமனதுடன் இந்த வருடத்தின் துவக்கம் இனிதாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு, இறைவனை மனதார வேண்டிக்கொண்டு இவற்றை செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ வேண்டும். அதன்பின் வயதில் பெரியவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி அவர்களின் ஆசீர்வாதம் பெற வேண்டும். பின்னர் வீட்டில் விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு அன்றைய நாள் முழுவதையும் குடும்பத்தினருடன் இனிமையாக கழிக்க வேண்டும். முக்கியமாக அன்றைய தினம் எந்த ஒரு கெடுதல்களையும், மற்றவர்களின் மனம் துன்பப்படும் வகையிலான பேச்சுக்களை பேசுவதோ, செய்வதோ கூடாது.

No comments