Breaking News

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு -இதனை உடனடியாக செய்து முடியிங்கள் இல்லை என்றால் பெரிய சிரமம் ஏற்படும்

ஆசிரிய நண்பர்களே SR இல் 4 நாளில் விடுதல் பதிவுகள் சரி செய்து கொள்ளுங்கள்

வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாறுதல் என்கிற விதியால் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மாறுதலில் செல்வார்கள்.

எனவே அனைத்து ஆசிரிய நண்பர்களும் தங்களது பணிப்பதிவேடு(SR) இல் ஏதேனும் விடுதல் பதிவுகள் உள்ளனவா என்பதனை அறிந்து, அவ்வாறு விடுதல் பதிவு இருந்தால் அதனை இன்னும் 4 நாளில் நிவர்த்தி செய்யவும்.

அவ்வாறு சரி செய்ய மறுக்கும் பட்சத்தில் இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்களது SR ஐ சரி செய்து கொள்ளவும்.

ஏனெனில் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மாறுதலில் சென்ற பிறகு அதனை சரி செய்வது இயலாத நிலை எற்படும்.

பல இடங்களில் அலுவலர்கள் கையொப்பம், முத்திரை இட்டும் அதிகாரிகள் கையொப்பம் இல்லாமல் உள்ளது.

No comments