பளபளப்பான சருமம் வேண்டுமா ? நரம்பு கோளாறுகள் அற்ற உடல்நிலை வேண்டுமா ? அனைத்தும் இந்த பழம் செய்யும் -வாங்க பார்க்கலாம்:
விளாம்பழம் கொடுக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக் கொண்டால், எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படி என்ன இருக்கிறது இந்த விளாம்பழத்தில்? விளாம்பழத்தின் பலன்களை (Fruits for Health) விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
அஜீரண கோளாறைக் குணப்படுத்தும் விளாம்பழத்தில், உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமாக இருக்கின்றன. இவை, எலும்பு, பல்லுக்கு பலம் கொடுப்பதோடு, இளநரையைப் போக்கும் என்பதும் உடலுக்கு வலிமை தரும் என்பதும் தெரியுமா?
சித்த மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான தொல்லைகள் அனைத்தும் நீங்கும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
விளாம்பழத்தில் வெல்லம் கலந்து சாப்பிட்டால், நரம்பு தளர்ச்சி, பித்தம், கால்சியம் குறைபாடு, என பல நோய்கள் ஓடிப்போகும். விளாம்பழத்தை முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பளபளக்கும் உடல் வறட்சி உள்ளவர்கள் தொடர்ந்து விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் மின்னும்.
No comments