Breaking News

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – வாய்ஸ் ரெக்கார்டுகளை அனுப்புவதற்கு முன் சோதிக்கும் முறை!

வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரல் பதிவு மெசேஜிங் அம்சத்தில் நாம் அடுத்தவர்களுக்கு செய்திகளை அனுப்பும் முன் நாம் சோதித்துக் கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பயனுள்ள அம்சத்தினை பலரும் ஆதரித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் அப்டேட்:

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தி பரிமாறும் செயலியான வாட்ஸ்அப் படிப்பிற்கும், வேலைக்கும், தகவல் தொடர்புக்கும் மற்றும் பொழுதுபோக்கிற்கும் இதை பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இளைய தலைமுறையினர் தங்கள் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் WhatsApp அதன் அம்சங்களை மீண்டும் புதுப்பித்துள்ளது. அதாவது குரல்பதிவு செய்திகளை (Voice note) அனுப்புவதற்கு முன் சோதிக்கும் விருப்பத்தை வழங்கியுள்ளது.

மிகவும் தேவையான மற்றும் பலனுள்ள இந்த அம்சம் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் குரல் பதிவுகளை அனுப்பக்கூடிய அம்சம் சமீப காலமாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சமீபத்தில் சேர்க்கப்பட்ட முன்னோட்ட விருப்பம் அதன் பயன்பாட்டை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் Android மற்றும் iOS சாதனங்களில் கிடைக்கிறது. ஆனால் ஒரு சிலர் இன்னும் இதன் பயனை பெற முடியவில்லை என்றால் செயலியை புதுப்பித்துக் கொண்டு பலனடையலாம். இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி நல்ல தரமான குரல் பதிவுகளை அனுப்பலாம்.

வழிமுறைகள்:

  • உங்களது வாட்ஸ்அப் செயலியில் குழு அல்லது தனிப்பட்ட நபரின் சாட்ஐ திறக்க வேண்டும்.
  • மைக்ரோஃபோன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பதிவை லாக் செய்ய அதை மேலே இழுத்து விடவும்.
  • குரலைப் பதிவு செய்யத் தொடங்கி, அது முடிந்ததும் ‘நிறுத்து’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ப்ளே’ விருப்பத்தை கிளிக் செய்து பதிவை கடைசி வரை கேட்கவும். அதன் குறிப்பிட்ட பகுதிகளைக் கேட்க, இடையில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம்.
  • இப்பொழுது, குரல் பதிவை அனுப்புவதற்கு ‘Send’ ஐகானைக் கிளிக் செய்யவும். நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான பட்டனை கிளிக் செய்து அழித்துக் கொள்ளலாம்.
  • குரல் உரையை மீண்டும் பதிவு செய்து, சோதித்து இதே போல் அனுப்பிக் கொள்ளலாம்.

No comments