Breaking News

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. புத்தாண்டு ஹேப்பி நியூஸ் வந்தாச்சு!

புத்தாண்டை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல அகவிலை நிவாரணமும் 3 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹரியானா நிதித் துறையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், பென்சனர்களும் பயனடைவார்கள்.

ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31 விழுக்காடாக உயர்த்தி வருகின்றன.

இந்த வரிசையில் ஹரியானாவும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி முதல் உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரியில் 31 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment: