Breaking News

மார்கழி மாத ராசி பலன்கள் 2021: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்:

 


மார்கழி மாதம் தனுர் மாதம். தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். நவகிரகங்களின் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டும். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பகவான் கண்ணனை கணவனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அதே போன்று ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில்தான்.

இந்த மாதம் மூன்று கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசியில் சனியோடு இருக்கும் சுக்கிரன் வக்கிரம் அடைகிறார். 15ஆம் தேதி தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை பண்டிகை கொண்டாடுகிறோம். இந்த நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை உண்டாகும் நுண்கலைகளில் ஆர்வம் உண்டாகும். 14ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையினால் சந்தோஷம் அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். குரு பார்வையால் திருமண யோகம் கை கூடி வரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும், மாத பிற்பகுதியில் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளை துவங்குவீர்கள் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும், வீடு மாறும் நிலை உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் நன்றாகப் படிப்பீர்கள், தரகு கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண தட்டுபாடு உண்டாகும் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், 15ஆம் தேதிக்குப் பின்னர் பொன் நகைகள் சேர்க்கை ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்.

துலாம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வருமானம் உண்டாகும் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்திருந்த தகவல் வந்தடையும். தகவல் தொடர்பு சிறப்படையும், 14ஆம் தேதிக்கு பிறகு கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக வெளியில் பாக்கியிருந்த பணம் வசூலாகும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 15ஆம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் இயந்திரத் தொழில் சிறப்படையும், ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகரிக்கும் கண் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.

விருச்சிகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும் அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 14ஆம் தேதிக்குப் பின்னர் எதிர்பார்த்த தகவல் வரும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், 15ஆம் தேதிக்குப் பின்னர் வீட்டை அழகுபடுத்துவீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். திடீர் பண வரவு அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் மன தைரியம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

No comments