பெண்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் -இந்த 3 பொருள் சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தில் அதிர்ஷ்ட லட்சுமியும், ஐஸ்வர்யமும் நிரந்தரமாக தங்கிவிடும்.
அதிர்ஷ்ட லட்சுமியும் 
ஐஸ்வர்யமும் எந்த இடத்தில் நிலையாக நிலைத்து இருக்கின்றதோ, அந்த இடத்தில் 
தரித்திரம் பிடிக்காது பீடை பிடிக்காது. அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் 
இருக்கக்கூடிய இடத்தில் வெற்றி நிலைத்திருக்கும்.
 நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை நேர்மறையான நல்ல விஷயங்களையும் 
கொடுக்கக்கூடிய மூன்று முக்கியமான பொருட்களை பற்றித்தான் இந்த பதிவின் 
மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மூன்று பொருட்களை 
தனித்தனியாக வைத்தாலே அதில் அபரிவிதமான நல்ல சக்தி நமக்கு கிடைக்கும். 
அப்பேர்ப்பட்ட மூன்று பொருளையும் ஒன்றாக சேர்த்து வைக்கும் போது சொல்லவா 
வேண்டும்.
 நல்லது ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டே தான் இருக்கும்.
சரி, அந்த மூன்று பொருட்கள் என்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். பஞ்ச 
பூத சக்தியை தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டு நல்லதை செய்யக்கூடிய பஞ்சமுக
 ருத்ராட்சம் ஒன்று. நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட பச்சை 
கற்பூரம் ஒரு சிறிய துண்டு. தேவலோகத்து பூவாக சொல்லப்படும் குங்குமப்பூ 
சிறிதளவு. இந்த மூன்று பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு இந்த மூன்று பொருட்களையும் ஒரு 
சிறிய தட்டில் வைத்து மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் வேண்டி 
பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக் 
கொண்டிருக்கும் எல்லா கஷ்டமும் உங்களை விட்டு விடுபட மனதார 
வேண்டிக்கொள்ளுங்கள். 
 இந்த மூன்று பொருட்களையும் நைசாக இருக்கும் ஒரு மஞ்சள் நிற காட்டன் 
துணியில் வைத்து கட்டி, பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். 
உங்களுடைய பீரோ நேர்மறை ஆற்றல் நிரம்பியதாக இருக்கும். பணப்புழக்கம் 
அதிகரிக்கும். அப்படி இல்லையென்றால் வரவேற்பறையில் கொஞ்சம் உயரமாக யார் 
கைக்கும் படாமல் ஆணியில் மாட்டி வைக்கலாம். அலமாரியின் மேல் வைக்கலாம். 
இந்த வாசம் உங்களுடைய வரவேற்பு அறை முழுவதும் பரவியிருக்கும். வீட்டில் 
இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். கண்திருஷ்டி வயிற்றெரிச்சல் 
பொறாமையுடன் உங்கள் வீட்டிற்குள் யாரேனும் நுழைந்தால் கூட அதனால் 
குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வராது.
சிலபேருக்கு இரவில் படுத்தால் தூக்கம் வராது. கெட்ட கனவுகளின் தொந்தரவு 
இருக்கும். வாழ்க்கையில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை நினைத்து தூங்காமல் 
புரண்டு புரண்டு படுப்பார்கள். படுக்கை அறையில் அலமாரியில் ஒரு சிறிய 
டப்பாவில் இந்த மூன்று பொருட்களை போட்டு வைத்துக் கொள்ளலாம். 
அது நம்முடைய 
விருப்பம் தான். ஆனால் அந்த டப்பாவில் சிறிய ஓட்டைகள் இருக்கவேண்டும். 
இதிலிருந்து நல்ல ஆற்றல் வெளிவர வேண்டும். அப்போதுதான் இந்த பரிகாரத்தில் 
பலனுண்டு.
காட்டன் துணியில் போட்டு கட்டி வைத்தோமே ஆனால் அதிலிருந்து தானாக நேர்மறை 
ஆற்றல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த மூன்று பொருட்களையும்
 அடிக்கடி மாற்ற வேண்டாம். பச்சைக் கற்பூரம் கரைய தொடங்கியதும் புதுசாக 
மற்றொரு பச்சை கற்பூரத்தை எடுத்து அந்த முடிச்சில் வைத்துக் கொள்ளலாம். 
நிச்சயமாக இந்த 3 பொருட்களையும் உங்கள் வீட்டில் ஒன்றாக வைக்கும் போது 
நீங்கள் நம்பவே முடியாத நிறைய நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். யாருக்கு 
எந்தப் பொருளில் எப்போது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றே சொல்ல முடியாது. 
உங்களுக்கு இந்த மூன்று பொருட்களில் ஏதாவது ஒரு பொருள் அதிர்ஷ்டத்தை 
கொடுக்குமா? அது முயற்சி செய்து பார்த்தால்தான் தெரியும். நம்பிக்கை 
உள்ளவர்கள் முயற்சி செய்து நல்ல பலனை பெறலாம்
 
No comments