அரையாண்டு விடுமுறை அறிவிக்க வேண்டும்: ஆசிரியர் சங்கங்கள் கடிதம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
வடகிழக்கு
பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், மாணவர்கள்
பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் 10 மற்றும் 12-ம்
வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும்,
பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு
உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே,
கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் 10 மற்றும் 12-ம்
வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை பள்ளிக் கல்வித் துறை ரத்து
செய்தது. அதற்கு மாறாக, டிசம்பர் மாத இறுதியில் திருப்புதல் தேர்வு
நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை
ஒட்டி அரையாண்டு விடுப்பு பத்து நாட்கள் வழங்கப்படும். ஆனால் நடப்பு கல்வி
ஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் 20-ம் தேதி முதல் 30-ம்
தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு
உள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள்,
சனிக்கிழமைகளில் வருவதால் அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று
தகவல் கசிந்துள்ளது.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ்,
புத்தாண்டையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்
சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளன. கடிதத்தில்
பண்டிகை காலங்களில் ஆசிரியர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரையாணடு விடுமுறை
வழங்க வேணடும் என குறிப்பிட்டுள்ளன.
No comments