Breaking News

சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு 2022-ன் துவக்கம் அட்டகாசமாக இருக்கும் :

கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட இடங்களில் கிரகங்கள் இருக்கும் வரை அவற்றுக்கான நல்ல பலன்களும் கெட்ட பலன்களும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். 

சனி பகவான் அதிக செல்வாக்கு செலுத்தும் கிரகங்களில் ஒன்றாக உள்ளார். அவரது பார்வை நம்மை தாக்கினால் அது தீய பலன்களைத் தருகிறது. ஆனால் அவருடைய கருணையான பார்வை அபரிமிதமான நன்மைகளைத் தருகிறது. சனிபகவான் 2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்கும் (Zodiac Signs) மாறவில்லை. எனினும், 2022 ஆம் ஆண்டில் அவர் இடம் பெயரப் போகிறார். 

சனி தற்போது மகர ராசியில் இருக்கிறார்

சனி தற்போது மகர ராசியில் சஞ்சரிக்கிறார். இவர் ஏப்ரல் 29 வரை இந்த ராசியில் இருப்பார். இந்த காலத்தில் இவர் 3 ராசிக்காரர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். அதன் பிறகு சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைவார். ஆனால் அதற்கு முன் இந்த 4 மாதங்களில் 3 ராசிக்காரர்களின் தலைவிதியையும் அவர் மாற்றிவிடுவார்.

மேஷம் (Aries)

மேஷ (Aries) ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் இனி முடிவுக்கு வரும். அடுத்த 4 மாதங்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித்தரும்.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29 வரையிலான காலம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். அனைத்து இடங்களிலும் அவருக்கு மரியாதை கிடைக்கும்.

கன்னி (Virgo)

கன்னி (Virgo) ராசிக்காரர்கள் 2022-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் முன்னேற பல வாய்ப்புகளைப் பெறுவார்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இரண்டுமே பலன் தரும். சாதகமான பண வரவு இருக்கும். பதவி உயர்வு பெற பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

சனிக்கிழமைகளில் இவற்றை செய்வது நல்லது 

இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அபரிமிதமான அருள் இருக்கும் என்றாலும், மற்ற ராசிக்காரர்களும் சனியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். இதற்கு சனிக்கிழமைகளில் சில செயல்களை செய்தால் போதும்.

இந்நாளில் அரச மரத்தின் அடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது, சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்வது ஆகியவை சிறப்பான பலன்களைத் தரும். இது தவிர, ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதால் சனி பகவான் மிக விரைவாக மகிழ்ச்சி அடைகிறார். இப்படிப்பட்ட உதவிகளை செய்பவர்களுக்கு அவர் உடனடியாக அருள் புரிகிறார்.

No comments