மேஷம் முதல் மீனம் வரை: 2022-ல் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மாதங்கள் இவைதான்:
இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. அனைவரும் புதிய நம்பிக்கையுடன் புத்தாண்டுக்காக காத்திருக்கிறார்கள்.
புத்தாண்டில் பல கிரகங்களின் இயக்கம் மாறப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் கிரக மாற்றங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. கிரகங்களின் ராசி (Zodiac Signs) மாற்றம் அனைத்து ராசிகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி 2022-ல் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சில மாதங்கள் அனுகூலமாக இருக்கும். அதே நேரத்தில், சில மாதங்கள் சிரமங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். 2022 ஆம் ஆண்டில் எந்த மாதத்தில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries): 2022 ஜனவரியில் சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் ஜாதகத்தில் சூரியன் 9வது வீட்டில் இருப்பதே இதற்குக் காரணம். இதனுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் மேஷ (Aries) ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்(Taurus): மே மாதம் உங்களுக்கு தொந்தரவுகள் நிறைந்த மாதமாக இருக்கும். இது தவிர, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களும் சுமாராக இருக்கும். சூரியனின் சஞ்சாரம் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும்.
மிதுனம் (Gemini): 2022 ஜனவரி மாதம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். இத்துடன் பிப்ரவரி, நவம்பர் மாதங்களிலும் பிரச்னைகள் ஏற்படும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடகம் (Cancer): பிப்ரவரி 2022 மிகவும் கடினமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இது தவிர ஜூன், டிசம்பர் மாதங்களிலும் பல பிரச்சனைகள் வரக்கூடும்.
சிம்மம் (Leo): இந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை, மார்ச் மாதங்கள் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். ஜாதகத்தில் சூரியன் ஆறாம் வீட்டில் இருப்பதால் தவறான குற்றச்சாட்டுகள் வந்து சேரும்.
கன்னி (Virgo): ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் சூரியன் இருப்பதால், பிப்ரவரி மாதம் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு (Virgo) இந்த மாதத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். இது தவிர, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களும் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.
துலாம் (Libra): சூரியன் ஆறாம் வீட்டில் இருப்பதால் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். மேலும், மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் சில நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
விருச்சிகம் (Scorpio): இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் மோசமானதாக இருக்கும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் இருக்கும். இது தவிர, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு (Sagittarius): இந்த ராசிக்காரர்களுக்கு மே, ஜூலை, நவம்பர் மாதங்கள் மோசமாக இருக்கும். இந்த மாதங்களில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்காது.
மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சாதகமற்றதாக இருக்கும். இது தவிர ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உண்மையில் எட்டாம் வீட்டில் சூரியன் வருவதால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
கும்பம் (Aquarius): கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மிகவும் சவாலானதாக இருக்கும். உறவில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
மீனம் (Pisces): இந்த ராசிக்காரர்கள் பிப்ரவரி, அக்டோபர் மாதங்களில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும். மனதிற்குள் ஏற்பட்ட ஏமாற்றத்தால், மேலும் தொல்லைகள் அதிகரிக்கும். இருப்பினும், பொறுமையுடன் இருந்தால் எல்லாம் சரியாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
No comments