Breaking News

வருமான வரி தாக்கல்: கடைசி நாள்-ஐ மீண்டும் நீட்டிக்க அதிக வாய்ப்பு உள்ளது..!


2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் டிசம்பர் 31, 2021 என அறிவிக்கப்பட்டு உள்ளது அனைவருக்கும் தெரியும், பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும், ஆனால் புதிய வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும் செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் நீட்டிக்கப்பட வேண்டும் எனத் தனிக்கையாளர்களும், வருமான வரி நிபுணர்களும் கூறுகின்றனர். 

 ஜிஎஸ்டி வரி குறைப்பு.. மத்திய அரசின் குட் நியூஸ்.. Ads by வருமான வரித்துறை வருமான வரித்துறை வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவின் படி 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 5.95 கோடி பேர் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளதாக ஜனவரி 11, 2021ல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டிசம்பர் 15, 2021ஆம் தேதி படி 2020-21 நிதியாண்டுக்கு 3.59 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. 2.36 கோடி பேர் 2.36 கோடி பேர் அப்படிப் பார்த்தால் அடுத்த 15 நாட்களில் 2.36 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் இது கட்டாயம் சாத்தியம் இல்லை என்பதாலும், மத்திய நிதியமைச்சகம் அதிகப்படியான வருமான வரியை வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்திருப்பதாலும் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாளை வருமான வரித் துறை நீட்டிக்கும் எனத் தெரிவிக்கின்றனர். 

ினமும் 6 லட்ச பேர் தாக்கல் தினமும் 6 லட்ச பேர் தாக்கல் மேலும் தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்து வருகின்றனர் என்றும், இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இன்போசிஸ் இன்போசிஸ் இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரித் தளத்தில் இன்னுமும் பல பிரச்சனைகள் இருந்து வரும் வேளையில் 15 நாட்களுக்குள் 2.36 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான், ஆனால் இதே வேளையில் புதிய வருமான வரித் தளத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஓரே நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் எனவும் நம்பப்படுகிறது. 

ஜனவரி 10 -15 2022 ஜனவரி 10 -15 2022

2020ல் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ல் இருந்து நவம்பர் 30, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 10, 2021 வரையில் நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் குறைந்தபட்சம் ஜனவரி 10, 2022 அதிகப்படியாக ஜனவரி 15, 2022 வரையில் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments