Breaking News

பான் கார்டு முதல் வங்கி ரூல்ஸ் வரை! பிப்ரவரி 1 முதல் எல்லாமே மாற போகுது! இதை நோட் பண்ணுங்க:


பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பல்வேறு விஷயங்கள் அப்படியே மாறும். பல்வேறு பொருட்களின் விலை மாறும்.

அதேபோல் சில அடையாள அட்டைகள், விதி முறைகள் இந்த பிப்ரவரி மாதம் முதல் மாற உள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி முதல் பல்வேறு விஷயங்கள் மாற்றம் அடைய உள்ளன. அவை என்னென்ன விஷயங்கள் என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.

1. சிலிண்டர் விலை: கடந்த அக்டோபர் மாதம் கடைகளில் விற்கப்படும் ரூ.1,695க்கு விற்ற சிலிண்டர், ரூ. 1,898-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ. 1068க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டுக்கு பின் சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கடைகளில் விற்கப்படும் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் ஆகியவை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. வங்கி வட்டி: பிப்ரவரி முதல், வங்கிக் கடன்கள் உங்கள் பாக்கெட் பணத்தை கணிசமாக பாதிக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, பல வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. இதன் பொருள் நீங்கள் ஒரு வங்கியில் கடன் வாங்கினால், நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும், மேலும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நேரம் அதிகரிக்கும். பட்ஜெட்டிற்கு பின் ரெப்போ விகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டால்.. கடன் இன்னும் அதிகரிக்கும். முக்கியமாக, உங்கள் அன்றாடச் செலவினங்களுக்காக நீங்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவை இது பாதிக்கலாம், இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து அதற்கேற்ப உங்கள் நிதியைத் திட்டமிடுவது முக்கியம்.

3. ரயில் நேரம்: இந்த பிப்ரவரி முதல், புதிய ரயில் அட்டவணை கொண்டு வரப்பட உள்ளது. 5,000 சரக்கு ரயில்கள் மற்றும் ஒரு சில பயணிகள் ரயில்களுக்கான கால அட்டவணையை மாற்ற உள்ளனர். பல ரயில்களின் நேரம் மாறும் வாய்ப்புகள் உள்ளன.

4. பான்கார்டு : விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். பிப்ரவரி மாதம் இந்த மாற்றம் கொண்டு வரப்படலாம். அதன்படி தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன. ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல்.. சிறிய சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்யும் வசதிகள் உள்ளன.

அதை மாற்ற சாமத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இனி பான் கார்டுகளை முறையாக அனுமதி பெற்று மட்டுமே விண்ணப்பிக்க செய்ய வசதியாக விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். பல தனியார் நிறுவங்களிடம் இருந்து பான் விண்ணப்பிக்கும் அனுமதியை பறிக்க முடிவு செய்துள்ளாராம். ஆதார் அட்டை போலவே .. இனி பான் அட்டைகளையும் முறையாக விண்ணப்பிக்க சென்டர்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

5. பாஸ்ட் டாக்: தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம். இதற்காக FasTag மாற்றங்களை செய்யஜனவரி 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை ஜனவரி 31, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாகனத்திற்கு. இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் ஜனவரி 31க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி அப்டேட் செய்வது?: இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

வங்கியுடன் இணைக்கப்பட்ட FASTag இணையதளத்தைப் பார்வையிடவும். தேவையான பக்கத்தை அணுக, 'FASTag' என்ற சொல்லை கூகுள் செய்யலாம்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்

அங்கே உள்ள "எனது சுயவிவரம்" என்ற பகுதிக்குச் சென்று KYC தாவலைக் கிளிக் செய்யவும்

முகவரிச் சான்று மற்றும் மற்ற விவரங்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு அப்டேட் கொடுக்கவும்.

அந்த பகுதியில் நீங்கள் அப்டேட் செய்த KYC காட்டப்படும்.

No comments