Breaking News

நீங்கள் வாங்குகிற தேன் தரமானதா..? கண்டுபிடிக்க எளிய வழிகள்!

 


தேன், உணவுப்பொருள் மட்டுமல்ல. மகத்தான மருந்துப் பொருளும் கூட. தேன் என்றால் நாக்கில் வைத்தால் இனிக்கும் என்பதை மட்டுமே அறியும் சமுதாயமாக இன்றைய சமுதாயம் உள்ளது.

அதிலும் நவீன குழந்தைகள், பால் எங்கிருந்து வரும் என்றால் பாக்கெட்டிலிருந்து வரும், என்பதைப்போல தேன் எங்கிருந்து கிடைக்கும் என்றால் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு கடைகளில் இருந்து கிடைக்கும் என்னும் நிலையே உள்ளது.

தேன் நமது ரத்தத்தின் மூலக்கூறுகளைப் போன்ற அமைப்பினைக் கொண்டது. அதன் வேதியியல் அமைப்புகள் மனிதனுக்கு மிக நெருக்கமாக அமையப்பெற்றுள்ளன. அதனால் உடலில் ஜீரண சக்தி குறைந்தவர்கள்கூட இதனை உட்கொள்ளலாம்.

தேனில் மூன்று வகைகள் உள்ளன:

முதலாவது கொம்புத் தேன். பாறைகள், மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்தத்
தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன் கிடைக்கும். இதற்கு மருத்துவ மதிப்பு குறைவு.

இரண்டாவது பொந்துத் தேன். குகை, மரப்பொந்து போன்ற இருட்டான இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள். இந்தத் தேன் வகை மிதமான அளவு கிடைக்கும். மருத்துவ மதிப்பும் மிதமான அளவு உண்டு.

மூன்றாவதாகக் கொசுத் தேன் என்ற சிறிய தேனீ வகை உண்டு. இந்தத் தேன் கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

*கண் பார்வைக்கு*
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

*இருமலுக்கு*
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

*ஆஸ்துமா*
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

*இரத்த கொதிப்பு*
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

*இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு*
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

*தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:*
1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

நீங்கள் வாங்குகிற தேன் தரமானதா..? கண்டுபிடிக்க எளிய வழிகள்!

தேனை வாயில் ஊற்றுவதோ அல்லது பருகுவதோ கூடாது. கைகளில் ஊற்றி நாவினால் நக்கியே உண்ண வேண்டும். இதுவே நேரடியாகவும், சீராகவும் ரத்தத்தில் கலக்கத் துணை புரிகிறது. பல இடங்களில் வணிகரீதியாக தேனில் பல கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பலவகையான இனிப்பு சிரப்புகளும், பாகுக்களும் (சர்க்கரை பாகு, வெல்லப் பாகு, சோளப்பாகு, டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை) இதனுடன் கலக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பலவகையான செயற்கைக் காரணிகளையும், சுவையூட்டிகள் மற்றும் மணமூட்டிகளையும் அதனுடன் கலக்கின்றனர். இவை உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

நல்ல தேன் எது என்று வீட்டிலேயே எளிமையான முறைகளில் பரிசோதிக்க முடியும். கட்டைவிரல் சோதனை, நீர் சோதனை, தீப்பெட்டி சோதனை மற்றும் வினிகர் சோதனை ஆகிய முறைகளாகும்.

(1) கட்டைவிரல் சோதனை:

ஒரு துளி தேனை கட்டைவிரலில் விட அது கீழே கொட்டினாலோ அல்லது பரவினாலோ உண்மையான தேன் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

(2) நீர்சோதனை:

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி அதில் தேனை ஊற்ற வேண்டும். ஊற்றிய தேன் தண்ணீரில் பரவினால் அது கலப்படத் தேனாகும். நேரடியாக கீழே சேர்ந்தால் உண்மையான தேன்.

(3) தீப்பெட்டிச் சோதனை:

ஒரு தீக்குச்சியை எடுத்து அதில் தேனைத் தொட்டு பற்றவைத்தால் உடனே பற்றிக்கொள்ளும். நன்கு ஜுவாலை விட்டு எரியும். கலப்படத் தேன் என்றால் எரியாது. காரணம் கட்டப்பட தேனில் இருக்கும் ஈரப்பதம் தீ எரிய விடாது.

(4) வினிகர் சோதனை:

ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் இரண்டு மூன்று சொட்டு வினிகரைச் சேர்க்க அந்தக் கலவை நுரைத்தால் அது கலப்பட தேன் என்று தெரிந்துகொள்ளலாம்.

சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது !!!

அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும்.

வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை ஏறாது.

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.

ஆனால்,

நாட்டு மருந்து கொடுக்கும்போது, ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள்) தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

தேனை பயன்படுத்தும் முறைகள்:-

------------------------------------------------------------

(01) உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

(02) தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

(03) தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

(04) தேனும், நாட்டு முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா ல் உபாதையிலிருந்து தப்பலாம்.

(05) இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

(06) தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

(07) உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

(08) தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

(09) மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

(10) கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

(11) வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

(12) தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

(13) அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

(14) அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

(15) முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

(16) தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

(17) ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

(18) அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

(19) நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

(20) என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

No comments