அதிகாலையில் மாதுளை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? நிபுணர்கள் விளக்கம்:
மாதுளை
பழத்தில் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால் இதை சாப்பிடுவது நம் உடல்நலத்திற்கு
ஆரோக்கியம் தரும் என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம்.
மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய
நலனை பாதுகாக்கிறது.
இதற்கிடையில் தினமும் காலையில் நான்கு டேபிள் ஸ்பூன் மாதுளை பழத்தை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும், முடி வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் காலை உணவிற்கு பிறகு இதை சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும் என்றும் கூறி இன்ஸ்டாகிராமில் பல பதிவுகளை பார்க்க முடிகிறது. உண்மையில் இதெல்லாம் சாத்தியம் தானா என்பதைப் பற்றி பார்ப்போம்.
தினமும் காலை நான்கு ஸ்பூன் மாதுளை பழம் சாபிட்டால் வேகமாக எடை குறைக்கலாம்; தலை முடி அதிகம் வளரும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. நிலையான பலன்கள் வேண்டுமென்றால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை நாம் முறையாக பின்பற்ற வேண்டும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நுபூர் பாட்டீல்.
தினமும் காலை நான்கு ஸ்பூன் மாதுளை பழம் சாபிட்டால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு வேகமாக எடை குறைக்கலாம் என்று கூறுவதற்கு எந்தவிதமான அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. மாதுளை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் இருந்தாலும் இதுபோன்று ஆதாரமின்றி கூறும் எந்த தகவல்களையும் நாம் மிகுந்த எச்சரிக்கையோடே அணுக வேண்டும் எனக் கூறுகிறார் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் டாக்டர்.திலீப் குப்தே.
உடல் எடை குறைப்பு :
உடல் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது மிகவும் சிக்கல் நிறைந்த நடைமுறை. நம்முடைய உடல் எடை குறைப்பில் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை போன்றவை குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை செலுத்துகின்றன. ஆகையால் மாதுளை பழம் மட்டும் சாப்பிட்டாலே போதும், உடல் எடை குறைந்துவிடும் என்று கூறுபவர்களை நம்பாதீர்கள்.
தலைமுடி வளர்ச்சி :
தலைமுடி வளர்ச்சியில் மரபணு, ஹார்மோன் சமநிலை, ஊட்டச்சத்து, ஆரோக்கியமான உடல்நலம் போன்றவை செல்வாக்கு செலுத்துகின்றன. மாதுளை பழத்தில் சில அழற்சி எதிர்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் இருந்தாலும், தினமும் குறிப்பிட்ட அளவு மாதுளை பழம் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இணையத்தில் உடல்நலம் குறித்து கூறப்படும் தகவல்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதுவும் குறிப்பாக உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று கூறுவதை மிகுந்த எச்சரிக்கையோடு அணுகுங்கள். நீடித்த ஆரோக்கியமான உடல்நலத்திற்கு சரிவிகித உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் அடிப்படையாகும் என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

No comments