Breaking News

வருமான வரியிலிருந்து விலக்கு பெற வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்

 

னவரி மாதம் பிறந்தாலே நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வருமான வரிக்கான ஆதாரங்களை சமர்பிக்க சொல்லி நச்சரிக்க தொடங்கிவிடுவார்கள்.
பழைய வரிமுறையில் எப்படியெல்லாம் வரி விலக்கு பெறலாம் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். முக்கியமாக வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி பலரது வரியை சேமிப்பதற்கு உதவியாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் சிரமம் என்னவென்றால் நம்மில் பெரும்பாலானோர் எதிலும் முதலீடு செய்திருக்க மாட்டோம். நிறுவனங்கள் நாம் முதலீடு செய்த ஆதாரத்தை கேட்கும் போதுதான் இதன் முக்கியத்துவம் நமக்கு புரியும். ஆகையால், இன்று பலரும் அறிந்திராத, அவ்வளவு பிரபலம் இல்லாத 5 வரி சேமிக்கும் வழிகளைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம். இதன் மூலம் நிறைய வரி விலக்குகளைப் பெறலாம்.

உங்கள் பெற்றோர்களுக்கு வீட்டு வாடகை செலுத்துங்கள்

நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் வசித்து வரும் காரணத்தால் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) பெற முடியவில்லை என்றால், உங்கள் பெற்றோர்களுக்கு வாடகை செலுத்துவதன் மூலம் இந்தச் சலுகையை பெற முடியும். வருமான வரிச்சட்டம் பிரிவு 10(13A)-ன் படி, உங்கள் பெற்றோர்களை வாடகைதாரர்களாக காண்பித்தால், உங்களால் வீட்டு வாடகை கொடுப்பனவில் வரிச் சலுகையை பெற முடியும். எனினும் நீங்கள் வேறு ஏதாவது வீட்டு வரிச் சலுகை பெற்றிருந்தால், HRA சலுகையை பெற முடியாது.

பெற்றோர்களிடம் வட்டி செலுத்துங்கள்

உங்கள் பெற்றோர்கள் வரி கட்டும் அளவிற்கு வருமானம் பெறவில்லை என்றால், வீட்டுச் செலவுக்கென்று அவர்களிடம் கடன் வாங்கி அதற்கான வட்டியை அவர்களிடமே முறையாக செலுத்துங்கள். இதற்கு வரிச்சலுகை கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் செலுத்திய வட்டிக்கு ஆதாரச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். எந்தவித ஆதாரமும் காண்பிக்காதபட்சத்தில் உங்களால் வரி விலக்கு கோர முடியாது. வருமான வரிச்சட்டம் பிரிவு 24B-ன் படி இதற்கு அதிகப்ட்சமாக ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

: உடனடியாக அப்ரூவ் செய்யப்படும் இந்த பர்சனல் லோன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மழலையர் பள்ளிக் கட்டண வரி விலக்கு

உங்கள் குழந்தையை ப்ளே ஸ்கூல் அல்லது மழலையர் பள்ளியில் சேர்த்திருந்தால், அதற்காக நாம் செலுத்தும் கட்டணத்திற்கு வரி விலக்கு கோர முடியும். இந்த வரிச் சலுகை 2015-ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்தாலும், பள்ளிக் கட்டண விலக்கு போல் இன்னும் இது பிரபலம ஆகவில்லை. வருமான வரிச்சட்டம் பிரிவு 80சி-ன் படி அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கான கட்டணத்திற்கு வரி விலக்கு பெற முடியும்.

பெற்றோர்கள் அல்லது மனைவி, குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடு

உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் நம்மால் வரி விலக்கு பெற முடியும். உங்கள் பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுத்திருந்தால், அதற்கான ப்ரிமியம் தொகைக்கு வரி விலக்கு பெறலாம். 65 வயதிற்கு குறைவான பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுக்கும்பட்சத்தில் அதிகபட்சமாக ப்ரீமியம் தொகை ரூ.25,000 வரை வரி விலக்கு பெறலாம். உங்கள் பெற்றோர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரி விலக்கு பெற முடியும்.

பெற்றோர்களுக்கான மருத்துவ செலவிற்கு வரி விலக்கு

உங்கள் பெற்றோர்களின் மருத்துவ செலவுகளுக்கு நீங்கள் வரி விலக்கு பெற முடியும். ஆனால் இதற்கு உங்கள் பெற்றோர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இந்த வயதில் அவர்களுக்கு நிறைய மருத்துவ செலவுகள் வருவதால், பிரிவு 80சி-ன் படி வரி விலக்கு பெறலாம். இதில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரி விலக்கு பெறலாம்.

No comments