Breaking News

100% வருமான வரியை சேமிக்க முடியும்... எப்படி தெரியுமா?

ருடத்தின் இந்த சமயத்தில் நீங்கள் பணி செய்யும் நிறுவனம், உங்களுடைய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பிறர், வரி தொடர்பான டாக்குமெண்ட்களை கேட்பது வழக்கம்.

நீங்கள் வழங்கக்கூடிய டாக்குமெண்ட்டுகளின் அடிப்படையில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் மீதமிருக்கக்கூடிய இந்த நிதியாண்டில் உங்களது வருமான வரியை கணக்கிட்டு, உங்களுக்கான மாத சம்பளத்தை வழங்கும்.

எனினும் இறுதியாக நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியானது நீங்கள் இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்த பிறகு வருமானவரித்துறையினரால் தீர்மானிக்கப்படுகிறது. வருமானவரித்துறை உங்களது வருமானத்திலிருந்து வரியை பிடித்துக் கொள்ளும் அல்லது உங்களுக்கு டேக்ஸ் ரீஃபண்ட் கூட வழங்கலாம்.

ஒருவேளை நீங்கள் பழைய வரி முறையை தேர்வு செய்துள்ளீர்கள் என்றால் வருமான வரியை எப்படி சேமிப்பது என்ற கேள்வி நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கும். உங்களது வருமானம் வரி விலக்கு கடந்து 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமாகும் பட்சத்தில் இந்த கேள்வி மிக முக்கியமானதாக அமைகிறது.

உங்களது ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் கூட, 100 சதவீத வரியை எப்படி சேமிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


ஒருவர் இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்யும்பொழுது பழைய மற்றும் புதிய வரிமுறைகளுக்கு இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் பழைய வரிமுறை மூலமாக நீங்கள் டேக்ஸ் டிடக்ஷன்களை கிளைம் செய்து கொள்ளலாம்.

ஆனால் உங்களது வரி சேமிப்பு பயணத்தை துவங்குவதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் அல்லது உங்களது வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்படி டிடக்ஷன்களை கிளைம் செய்ய வேண்டும்.

பழைய வரிமுறையை தேர்வு செய்யக்கூடிய மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய பொதுவான டிடக்ஷன்களின் பட்டியல் :

- வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 16 இன் கீழ் 50,000 ரூபாய்க்கான ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்.

- வருமான வரி சட்டத்தில் பிரிவு 80C யின் கீழ் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம், பிராவிடண்ட் ஃபண்ட், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட், ஹவுஸிங் லோன், குழந்தைகளின் கல்வி கட்டணம் போன்ற பேமெண்ட்களுக்கு 1,50,000 ரூபாய் வரையிலான டிடக்ஷன்.

- மத்திய அரசு அறிவித்துள்ள நேஷனல் பென்ஷன் திட்டத்தில் செய்துள்ள பங்களிப்பிற்காக வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80CCD (1B) -இன் கீழ் 50,000 ரூபாய்க்கான டிடக்ஷன்.

- வருமான வரி சட்டத்தின் பிரிவு 80D -இன் கீழ் தனக்கோ, வாழ்க்கை துணைக்கோ மற்றும் குழந்தைகளுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம்காக செலுத்திய பேமெண்ட்களுக்கு 25,000 ரூபாய் வரை டிடக்ஷன் கிளைம் செய்து கொள்ளலாம். இதுவே சீனியர் சிட்டிசன் பெற்றோர்களின் மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம்காக செலுத்திய பேமெண்ட்க்கு 50,000 வரையிலான டிடக்ஷன் அனுமதிக்கப்படுகிறது.

- வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 24(b) இன் கீழ் வீட்டு கடனுக்கான வட்டிக்கு 2,00,000 ரூபாய் வரை ஒரு ஆண்டுக்கு டிடக்க்ஷன் அனுமதிக்கப்படுகிறது.

- இப்பொழுது 12 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

- இதற்கு நீங்கள் லீவ் டிராவல் அலவன்ஸ், டெலிபோன் பில் ரீஇம்பர்ஸ்மெண்ட், ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும். அதோடு ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்களின் பலன்களை பெறுவதன் மூலமாக உங்களது வருமானத்தை 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக காட்ட வேண்டும்.

- இப்படி இருக்க உங்களது HRA 3.60 லட்ச ரூபாயாகவும், LTA 10,000 ரூபாயாகவும் மற்றும் போன் பில்களுக்கான ரீஇம்பர்ஸ்மெண்ட்கள் 6,000 ரூபாயாகவும் இருக்கும்.

- பிரிவு 16 இன் கீழ் ஸ்டாண்டர்ட் டிடக்ஷனாக 50,000 ரூபாய் கிளைம் செய்யுங்கள் மற்றும் ப்ரொபஷனல் டேக்ஸ் 2, 500 எக்சம்ஷன் பெறுங்கள்.

- இந்த டிடக்ஷன்களுடன் உங்களது மொத்த வரிக்கு உட்பட்ட வருமானம் 7,71,500 ரூபாயாக இருக்கும்.

- ஒருவேளை நீங்கள் LIC, PPF, EPF, போன்றவற்றில் முதலீடு செய்திருந்தாலோ அல்லது உங்களது குழந்தைகளுக்கான பள்ளி கட்டணத்தை செலுத்தி இருந்தாலோ பிரிவு 80 C யின் கீழ் மேலும் 1.5 லட்சம் டிடக்ஷன் கிளைம் செய்யலாம்.

- நேஷனல் பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள் பிரிவு 80CCD இன் கீழ் 50,000 ரூபாய் டிடக்ஷன்க்கு தகுதி பெறுகிறார்கள். இந்த இரண்டு டிடக்ஷன்களுக்கு பிறகு உங்களது வரிக்கு உட்பட்ட வருமானம் 5,71,500 ரூபாயாக இருக்கும்.

- உங்களுக்கு, உங்கள் வாழ்க்கை துணைக்கு அல்லது உங்கள் குழந்தையின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் பேமெண்ட்க்காக 25,000 ரூபாய் கிளைம் செய்யுங்கள். இதுவே சீனியர் சிட்டிசன் பெற்றோர்களின் ஹெல்த் பாலிசிகளுக்கு 50,000 எக்ஸம்ப்ஷன் கிளைம் செய்யலாம்.

- இந்த 75 ஆயிரம் ரூபாய் டிடக்ஷனுக்கு பிறகு உங்களது வருமானம் 4,96,500 ரூபாயாக இருக்கும். இப்போது நீங்கள் இந்த வருமானத்திற்கு எந்த ஒரு வரியையும் செலுத்த தேவையில்லை.

No comments