ரூ.6 ஆயிரம் தங்கம் வாங்கினால், ரூ.1200 வட்டி வருமானம்; இந்தத் திட்டம் தெரியுமா?
மத்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGBs) வெளியிடப்படுகின்றன.
மேலும், இந்த இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGB) கள் அரசாங்க ஆதரவு பத்திரங்கள் ஆகும். இதை சொத்துக்களாக கருத முடியும்.
இந்தத்
தங்கப் பத்திரங்களின் விலையை இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது. இந்தப்
பத்திரங்களை ஆன்லன் டிஜிட்டல் மூலமாக பரிவர்த்தனை செய்து வாங்கினால் ரூ.50
தள்ளுபடி வழங்கப்படும்.
மேலும், முதலீட்டின் தொகைக்கு ஆண்டுக்கு 2.5
சதவீத வட்டியை அரசாங்கம் வழங்குகிறது. கடைசி வட்டியானது முதிர்ச்சியின்
போது அசல் தொகையுடன் செலுத்தப்படும்.
உதாரணமாக, ஒரு தனி நபர் 1 யூனிட் (1 கிராம் தங்கம்) ரூ.6,000க்கு வாங்கியிருந்தால், வாங்குபவர் ரூ.1,200 வட்டியைப் பெறுவார்.
இந்தத் திட்டத்தின் (SGB) அடுத்த தவணை பிப்ரவரி 12ஆம் தேதியன்று சந்தாவிற்கு திறக்கப்படும். சந்தா பிப்ரவரி 16ஆம் தேதி நிறைவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments