Breaking News

ஸ்மார்ட்போன் வாங்கப்போறீங்களா..? இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க

ந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இந்த சமயத்தில், கன்ஸ்யூமர்களும் தங்களுக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்பில் உட்பட ஸ்மார்ட் சாதனங்களை எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்த தகவல் இருந்த முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.
எந்த ஒரு ஸ்மார்ட் எலக்ட்ரானிக் சாதனத்தை வாங்குவதற்கு முன்பும் இந்தியர்கள் கவனிக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் வாங்கும்போது 76% ஸ்மார்ட் டிவைஸ் யூசர்கள் செயல்திறனுக்கு முக்கியத்துவம் தருகின்றனர், 66% யூசர்கள் கிராபிக்ஸ் மற்றும் கேமிங் திறன்கள் திறன்களை கருத்தில் கொள்கின்றனர், மற்றும் 62% 5G இணைப்பு இருக்கிறதா என்பதை கவனிக்கின்றனர் என்பதை ஒரு சர்வே மூலமாக ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.


"இந்தியாவின் 77 சதவீத ஸ்மார்ட் டிவைஸ் யூஸர்கள் சிப்செட் ஸ்மார்ட் ஃபோன்களின் அனுபவத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக கருதுகின்றனர் என்பதை சர்வே வெளிகாட்டி உள்ளது," என்பதை மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் கூறுகிறது. இதன் மூலமாக ஸ்மார்ட்போன்கள், இயர் போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் லேப்டாப்புகள் போன்ற ஸ்மார்ட் சாதனங்களில் சிப்செட்டுகளின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுகிறது.

சிப்புகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது?

  • தற்போது மார்க்கெட்டில் வெளியாகும் ஒவ்வொரு புதிய ஸ்மார்ட் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களிலும் ஹை என்ட் சிப்செட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளின் சிறந்த செயல்திறன் முதல் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் AI திறன்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி போன்கள் வரை அனைத்து முன்னணி பிராண்டட் ஃபோன்களும் தரமான சிப்செட்டுகள் மூலமாக இயங்குகின்றன.

  • "இந்த சிப்செட்டுகள் கன்ஸ்யூமர்களின் அனுபவத்தை வடிவமைக்கின்றன மற்றும் நாம் அடுத்த தலைமுறை 5G நெட்வொர்க்குகளுக்கு மாறும் இந்த சமயத்தில் OEM -களை வேறுபடுத்தி காட்டுவதற்கு உதவுகின்றன," என்று அறிக்கை கூறுகிறது.

  • மேலும் இந்தியா முழுவதும் உள்ள 61% ஸ்மார்ட் டிவைஸ் யூஸர்கள் மீடியா டெக் சிப்செட்டுகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மீடியா டெக் என்பது சந்தையில் 31% ஷேர் கொண்ட Q3 2023 ஆண்டின் உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் சிப்செட் பிராண்ட் என்ற பெயரைக் கொண்டுள்ளது.

  • "எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனத்திற்கும், தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் எதிர்காலத்தில் நுகர்வோருக்கு உண்மையான வேறுபாடாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஆய்வு தலைவர் தருண் பதக் கூறினார்.

எனவே அடுத்த முறை ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது மேலே கூறப்பட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு உங்களது முடிவை எடுப்பது உங்களுக்கு பலவிதங்களில் நன்மையில் முடிவடையும். சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

No comments