Breaking News

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள் மற்றும் எளிய விளக்கங்களுடன் முக்கிய தொகுப்பு அனைவரும் ஒருமுறையாவது படியிங்கள்.

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய  அரசாணைகள் மற்றும் எளிய விளக்கங்களுடன் முக்கிய தொகுப்பு அனைவரும் ஒருமுறையாவது படியிங்கள்.

இறந்த அரசு ஊழியரின் குழந்தைகள் கல்வி தொடர உதவி. (G.O.Ms.No.1699 Education Dt.14-9-1978)

1)கல்லூரியில் படிக்கும் இறந்தவரின் குழந்தைகளுக்கு டிகிரி முடிக்கும் வரை கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குண்டு. தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால்  போதும்.                            

2) ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தாலும் கட்டணம் (Tuition Fees) செலுத்தத் தேவையில்லை. G.O. Ms. No. 864, Education Dt.21-05-1980.                

3) இறந்தவரின் அனைத்து குழைந்தைகளுக்கும் இச்சலுகை உண்டு.        

4) விடுதியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு விடுதிக் கட்டணம் திரும்பக் கிடைக்கும்.(see also Govt.Lr. 109168/RA2/ 82-2.Education Dt.09-04-1983)      

5) சொந்த ஊரிலிருந்து கல்லூரி 2 கீ.மீக்கு அதிகமான தூரத்தில் இருந்தால் விடுதியில் தங்கியும் படித்து,விடுதிக் கட்டணமும் ஈடு செய்யலாம். கல்லூரியும் வீடும் நகர எல்லைக்குள் இருந்தால் விடுதி கட்டணம் கிடைக்காது. Govt. Lr.No. 109168/RA2/87-2.dt 09-04-1983.                  

6) விதிகள் தெரியாமையால் கல்லூரி / விடுதி கட்டணம் செலுத்தி விட்டவர்கள் செலுத்தப்பட்ட தொகையை திரும்பப்பெறலாம்.ஒராண்டிற்குள் இதற்கு மனு செய்ய வேண்டும். Govt.Lr. No. 21710/79 -Education dt 05-10-79. Govt.Lr.No.109168/RA.2/ 82-2.Education dt.09-04-83 /and Govt.Lr.1275, Education dt07-08-87.

7) மாலை நேரக் கல்லூரியில் படிப்பவருக்கும் தொகை கிடைக்கும். ஆனால் படிக்கும் பொழுது எந்த வேலையிலும் இருக்கக்கூடாது. G.O.Ms.No.2098,Education dt.22-09-76.

8) அரசு அங்கீகாரம் செய்துள்ள பள்ளிகளில் பயில்பவர்கள் அனைவருக்கும் இச்சலுகை உண்டு. Fee Levying School -ல் படித்தால் இச்சலுகை கிடைக்காது. பிற மாநிலங்களில்   அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படித்தாலும் இந்த உதவி கிடைக்கும்.

9) Professional. Course படிப்பவர்களுக்கும் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் இரண்டும் கிடைக்கும்.          

10) தேர்வில் தோல்வி அடைந்தால் இச்சலுகை நிறுத்தப்படும். தேர்ச்சி பெற்ற பின்னரே இச்சலுகை தொடரும்.           

11) இச்சலுகையோ அல்லது ஏதேனும் அரசிடம் கிடைக்கக் கூடிய சலுகையோ இதில் மாணவர் விரும்பியது பெறலாம். Govt.Memo.No.50491/SI/78-3, Education dtm07-12-78, Govt. Lr.No.110253/k3/86-3, Education dt.19-06-87, G.O.No.888 Finance dt.12-05-82, Govt.Lr.No.110253/k3/86-3, Education dt.19-06-87.                     

12)  இதற்கென அமைந்த படிவத்தில் மனு செய்யவேண்டும். Govt. Ms.1699, Education dt.14-09-78, Govt. Lrm No.64187/RA2/83-17, Education dtm28-10-86.          

13) ஒரு மாணவருக்கு ஒரு பட்டப்படிப்பிற்கு மட்டும் இச்சலுகை கிடைக்கும். இரண்டு பட்டப்  படிப்பிற்கு கிடைக்காது. Govt.lr.(Ms.) No.1275 dt.07-08-87.           

14) மனுவுடன் பட்டியல்கள் இணைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள்  கல்விக் கட்டணத்திற்கான பட்டியல்களை தொலைத்து விட்டாலும் டூப்ளிகேட் பட்டியல்கள் இணைத்தனுப்பி தொகை பெறலாம். Govr. Lr.(Ms) No. 1275 dt.07-08-87.

கல்விக் கட்டணம் செலுத்துவது குறித்து.

1) கல்வி கற்கும் குழந்தைகள் இந்த உதவி பெறுவதற்கு  ஏதுவாக ஓய்வூதியம் ஒப்பளிக்கும் அதிகாரி Eligibility -cum Entitlement Card ஒன்று வழங்குவார். இந்த அடையாள அட்டையை மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தில்   சமர்ப்பித்து கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறலாம்.                      

2) கட்டணம் செலுத்திய தொகையை மீளப் பெறுவதற்கு  இணைப்பு - 1ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் துறைத் தலைவருக்கு மனு செய்ய வேண்டும். அவர் தொகை ஒப்பளிப்பார்.            

3) ஒரு கல்வியாண்டின் இடையில் ஒரு மாணவன் வேறு பள்ளி/ கல்லூரிக்கு மாறினால் புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

தகவல்:                             

ந. அப்பர் சுந்தரம் தஞ்சாவூர்

No comments