உப்பு பாத்திரத்தை ஏன் அடிபிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா?. இதன் அறிவியல் காரணம் என்ன?. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!!!
உலகில் அனைவரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ஒரே பொருள் உப்பு மட்டும்தான். பொதுவாகவே தமிழர்களை பொருத்தவரை உப்பு என்பது தெய்வீகமாக பார்க்கப்படுகின்றது.
உப்பு தொடர்பாக பல கருத்துக்கள் இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் உப்பு தொடர்பாக பயன்படுத்திய சில வழிமுறைகளில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் உள்ளன. அதாவது நம்முடைய முன்னோர்கள் உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி புகாத வகையில் வைக்க வேண்டும் என்றும் உப்பை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டனர்.
ஆனால் இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளது. உப்பை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தாமல் உடலுக்கு தேவையான அயோடின் இதில் உள்ளது. இதற்காகத்தான் உணவில் உப்பு என்பது அவசியமானதாக உள்ளது. இதனுடைய சுவை காலப்போக்கில் நமக்கு இன்றியமையாததாக மாறிவிட்டதால் சுவைக்காக மட்டும் பயன்படுத்துவதற்காக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பீங்கான் பாத்திரத்தில் ஒளி உள்ளே செல்லாத வகையில் உப்பை வைக்க வேண்டும்.
அதற்கு காரணம் உப்பில் உள்ள அயோடின் என்ற ஒரு வேதிப்பொருள். இது உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியக்கூடியது. இதனை வேறு உலோகத்துடன் தாக்கம் புரியாத வகையில் களஞ்சியப்படுத்த வேண்டும். அந்த பாத்திரம் ஒலி உள்ளே செல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு காரணம் சூரிய வெப்பத்தில் அயோடின் அழிவடையக்கூடியது என்பதால் தான்.
உப்பு இருக்கும் பாத்திரத்தை அடுப்பின் அருகே வைக்கக் கூடாது என்று குறிப்பிட்டதற்கு இதுதான் காரணம். அயோடின் வெப்பத்தில் அழிவடைய கூடியது. உப்பில் அயோடின் அழிந்துவிட்டால் அதற்கு பிறகு உணவில் சேர்ப்பது பிரயோஜனம் அற்றது.அதே சமயம் சமையலின் போதும் கூட உப்பை உணவு ஆரிய பிறகு தான் சேர்க்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. வெப்பம் தணிந்த பிறகு உப்பை சேர்க்கும் போது மட்டுமே உப்பு சேர்ப்பதன் உண்மையான பலன் நமக்கு கிடைக்கும்.
No comments