வருமான வரி செலுத்துவோர் மாஸ்..10 வருடத்தில் "டபுள் மடங்கு" உயர்வு.. கலக்கும் மத்திய அரசு.. ஹேப்பி
வருமான வரியை செலுத்துவது என்பது அடிப்படை கடமையாகும்.. ஒருவேளை வரி செலுத்தாவிட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன தெரியுமா?
அபராதம் எவ்வளவு தெரியுமா?
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். வருமான வரி தாக்கல் செய்வதை வருமான வரித்துறை மிகவும் எளிமை ஆக்கியிருக்கிறது.. பொதுமக்கள் வசதிக்காக ஆன்லைனிலேயே வருமான வரி தாக்கல் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது..
மத்திய அரசு: மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனினும், சிலர் வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள்..
அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில்கூட அறிவித்திருந்தது. அதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.
ஒருவேளை, வருமான வரி தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அப்படி அபராதம் கட்டினால், வட்டியும் சேர்ந்துவிடுவதுடன், வரிச்சலுகைகளையும் பெற முடியாது. வரி பிடித்தம் செய்யப்பட்டவர்கள் உரிய தேதியில் வருமான வரி தாக்கல் செய்தால், வட்டியுடன் பணம் திரும்பக் கிடைக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.. அதன்படி, இந்த 10 வருஷத்தில், இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை டபுள் மடங்கு உயர்ந்துவிட்டதாம். மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுகுறித்து கூறியதாவது:
வரி தாக்கல்: "கடந்த நிதியாண்டில், நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 7.78 கோடியாக இருந்தது. இது கடந்த 2013 - 14 நிதியாண்டில் இருந்த 3.80 கோடியுடன் ஒப்பிடுகையில், 104.91 சதவீதம் அதிகமாகும். இந்த காலகட்டத்தில் நிகர வரி வருவாயும் 160.52 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2013 - 14 நிதிஆண்டில் 6.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிகர வரி வருவாய், கடந்த நிதியாண்டில் 16.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 2014ம் நிதியாண்டில் 7.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மொத்த வரி வருவாய், கடந்த 2023ம் நிதியாண்டில் 19.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம் வரிக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 5.62 சதவீதத்திலிருந்து 6.11 சதவீதமாக உயர்ந்திருக்கிறது..
டபுள் மடங்கு: மத்திய அரசு நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வருவாயாக 18.23 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதில் தனிநபர் வரி மற்றும் கார்ப்பரேட் வரியும் அடங்கும். இது, கடந்த நிதியாண்டின் 16.61 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, 9.75 சதவீதம் அதிகமாகும்" என்று தெரிவித்திருக்கிறது.
No comments