Breaking News

தை அமாவாசையில் இதையெல்லாம் செய்ய தவறாதீர்கள்..!

 


மாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மேலும் அன்று என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள், தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

2. முக்கியமாக மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. சமையலில் பூசணிக்காயும் வாழைக்காயும் சேர்த்து சமைக்க வேண்டும்.

3. விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது. முடிந்தவரை எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

4. முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க தவறக்கூடாது.

5. நாம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், சிரார்த்தம் அவர்களுக்கு பிடித்தமான படையல் போட்டு வழிபட்டால் அவர்கள் மன திருப்தி அடைந்து நல்லாசி புரிவார்கள் என்பது ஐதீகம்.

6. படையலிட்டு காகத்திற்கு வைக்கும் போது, சனியின் வாகனமான காகம் அதை சாப்பிடுவதால் சனிபகவான் வழிபாடு பூர்த்தியாகின்றது. இதனால் சனி பகவானின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் கூற்று.

7. முக்கியமாக காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் சாப்பிட வேண்டும்.

8. பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.

No comments