Breaking News

அடிக்கடி நெஞ்நெரிச்சலை சந்திக்குறீங்களா? அப்ப இந்த மோசமான நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.


நமது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் பற்றி நிறைய பேருக்கு தெரியாது.

அதில் ஒன்று தான் ஹையாடல் ஹெர்னியா என்று அழைக்கப்படும் இரைப்பை ஏற்றம். இது ஒரு வகையான குடலிறக்க பிரச்சனையாகும்.

இப்பிரச்சனையானது உணவுக் குழாயும், இரைப்பையும் இணையும் இடத்தில் ஏற்படும் ஒருவித பெரிய வீக்கம் அல்லது ஒரு தசை வளர்ச்சியைக் குறிக்கிறது. பொதுவாக சிறிய அளவிலான ஹையாடல் ஹெர்னியா எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.

ஆனால் பெரிய அளவிலான ஹையாடல் ஹெர்னியாவைக் கொண்டிருந்தால், அது அடிக்கடி நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். பொதுவாக இந்த அறிகுறிகள் சுய மருத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் சரியாகும். ஆனால் தீவிர நிலையில், அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். இப்போது இந்த ஹையாடல் ஹெர்னியாவின் சில எச்சரிக்கை அறிகுறிகளையும், அதற்கான சிகிச்சைகள் எப்படி இருக்கும் என்பதையும் காண்போம்.

ஹையாடல் ஹெர்னியாவிற்கான காரணங்கள்

ஹையாடல் ஹெர்னியாவைக் கொண்ட பெரும்பாலானோருக்கு, அப்பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. இந்த வகை ஹெர்னியா பல காரணங்களால் ஏற்படலாம். அதில் பிறவிலேயே வழக்கத்தை விட இரைப்பையின் மேல் பகுதியில் பெரிய இடைவெளி இருப்பது, அப்பகுதியில் காயம், வயதாகும் போது உதரவிதானத்தில் ஏற்படும் மாற்றங்கள், கர்ப்பத்தினால் வயிற்றுப் பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தம், உடல் பருமன், நாள்பட்ட இருமல், மிகவும் கனமான பொருட்களை தூக்குவது அல்லது கழிவறையில் நீண்ட நேரம் சிரமப்பட்டு மலம் கழிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஹையாடல் ஹெர்னியாவின் அறிகுறிகள்

ஹையாடல் ஹெர்னியாவின் முதன்மை மற்றும் பொதுவான அறிகுறி நெஞ்செரிச்சல். அதுவம் படுக்கும் போது நெஞ்செரிச்சல் இன்னும் மோசமாக இருக்கும். இது தவிர, பின்வரும் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும்.

* அதிகப்படியான அமில சுரப்பு அல்லது GERD

* நெஞ்சு வலி அல்லது எபிகாஷ்ட்ரியா வலி

* விழுங்குவதில் சிரமம்

* அடிக்கடி ஏப்பம்

* வயிற்று உப்புசம்

* வீங்கிய வயிறு

* வாந்தி போன்றவை.

தீவிர நிலையின் அறிகுறிகள்

ஹையாடல் ஹெர்னியா தீவிர நிலையில் இருந்தால், பின்வரும் அறிகுறிகள் தென்படும். அவை:

* மூச்சுத்திணறல்

* நெஞ்சு அல்லது வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி

* தொடர்ச்சியாக மேல் வயிறு உப்புசமாக இருப்பது

* வாந்தி மற்றும் வாயுவை வெளியேற்ற முடியாமல் தவிப்பது

இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இவை முற்றிய நிலையில் இருக்கும் ஹையாடல் ஹெர்னியாவின் அறிகுறிகளாகும்.

ஹையாடல் ஹெர்னியாவிற்கான சிகிச்சை முறைகள்

நிறைய பேருக்கு ஹையாடல் ஹெர்னியாவின் அறிகுறிகள் தெரியாது என்பதால், அத்தகையவர்களுக்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஆனால் பெரிய அளவிலான ஹையாடல் ஹெர்னியாவைக் கொண்டிருப்பவர்களுக்கு, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.

மருந்துகள்

ஹையாடல் ஹெர்னியாவின் அறிகுறிகள் தெரிந்து மருத்துவரிடம் சென்றால், முதலில் மருத்துவர் அதிகப்படியான அதிகப்படியான அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஆன்டாசிட்டுகள் மற்றும் மருந்துகளை எடுக்க பரிந்துரைப்பார். ஆனால் இந்த ஆன்டாசிட்டுகள் அமில உற்பத்தியை நிறுத்தாது. மாறாக நெஞ்செரிச்சலால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும். முக்கியமாக எக்காரணம் கொண்டும் சுயமாக எந்த மருந்தையும் எடுக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அறுவை சிகிச்சை

ஒருவேளை மருந்துகளால் உங்களின் பிரச்சனை சரியாகாவிட்டால், மருத்துவர் ஹையாடல் ஹெர்னியா அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென்று கூறுவார். இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பின், ஹையாடல் ஹெர்னியா பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

எனவே உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். முக்கியமாக ஆரம்பத்திலேயே எந்த ஒரு பிரச்சனையையும் கண்டுபிடித்துவிட்டால், குறைவான வலியுடன் விரைவில் குணமாகலாம் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

No comments