Breaking News

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சர்க்கரையின் அளவு அதிகரித்து இருக்கலாம்:

ஹைப்பர் கிளைசீமியா (Hyperglycemia) என்பது ஹை பிளட் குளுக்கோஸ் (பிளட் ஷுகர்) என்பதற்கான டெக்கனிக்கல் டெர்ம் ஆகும்.

உடலில் இன்சுலின் மிக குறைவாக இருக்கும் போது அல்லது உடலால் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாதபோது ஹை பிளட் ஷுகர் நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஹைப்பர் கிளைசீமியாவிற்கு சரியான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் உடலில் இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட கூடும்.

உடலின் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதால் ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்படுகிறது. உங்கள் உடலால் இன்சுலினை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால் அல்லது உங்கள் அமைப்பில் போதுமான இன்சுலின் இல்லாவிட்டால் இந்த நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நீங்கள் இரத்த சர்க்கரை அளவை முடிந்தவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாலும் சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்பட்டுவிடும். சாப்பிடாமல் இருக்கும்போது உங்கள் உடலின் இரத்த சர்க்கரை 125 mg/dL (ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்கள்) அதிகமாக இருந்தால், உங்களுக்கு ஹைப்பர் கிளைசீமியா உள்ளது என்று அர்த்தம்.

ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகள்:
1) அதிக தாகம் மற்றும் உலர்ந்த வாய்.
2) அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
3) உடல் சோர்வு.
4) மங்கலான பார்வை.
5) திடீர் எடை இழப்பு.
6) சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகள்.

உயர் இரத்த சர்க்கரைக்கான காரணங்கள்:
1) மன அழுத்தம்
2) சளி போன்ற வேறு ஏதேனும் நோய்
3) உணவுக்கு இடையில் அதிகமாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவது.
4) உடற்பயிற்சி செய்யாமல் அல்லது உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது.
5) நீரிழப்பு
6) நீரிழிவு மருந்தின் அளவை தவறாக எடுத்துக்கொள்வது
7) அதிகப்படியான சிகிச்சை
8) மற்ற மருந்துகளுடன் கலந்த ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வது.

சர்க்கரையின் அளவை பரிசோதிக்கும் உபகரணத்தை வைத்து அடிக்கடி நீங்கள் உங்கள் உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் கேக்குகள் மற்றும் சர்க்கரை பானங்கள் போன்றவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். டீஹைட்ரேட் ஆக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் சர்க்கரை அதிகம் இல்லாத பானங்களை நீங்கள் அருந்தலாம். தினம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் செய்யலாம் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காமல் ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. இன்சுலின் மருந்துகள் பயன்படுத்துபவராக இருந்தால் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

No comments