மல்லாக்கொட்டை.. மலைக்க வைக்கும் கொட்டை.. நோயை விரட்டி விரட்டி ஒழிக்கும் கொட்டை.. மாஸ் மல்லாக்கொட்டை
மல்லாக்கொட்டையை சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? பாதாம் பருப்புகளில் இல்லாத சத்து, இந்த மல்லாக்கொட்டையில் இருக்கிறதா என்ன?
ரத்த நாளங்கள்: இந்த மல்லாக்கொட்டைகளை சாப்பிடுவதால் பலன்கள் என்னென்ன தெரியும்? நம்முடைய ரத்த நாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.. இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது... வைட்டமின் C, E இரண்டுமே உள்ளதால், முதுமை தோற்றத்தை நீக்கி, இளமை தோற்றத்தை தக்கவைக்கிறது.. இதனால், சருமத்திலுள்ள காயங்களும் எளிதாக குணமாகும்.. தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்க துவங்கும். ஞாபகசக்தி பெருகும்.. புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும்
பெரும்பாலும், மல்லாக்கொட்டையை அதிகம் சாப்பிட்டால் கொழுப்பு சத்தும் அதிகரிக்கும் என்பார்கள். அது தவறு. நம் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்வதே இந்த மல்லாக்கொட்டையின் பலன்களாகும்..
அதேபோல, பாதாம், பிஸ்தா போன்றவைகளில் மல்லாக்கொட்டையைவிட அதிக சத்துக்கள் இருப்பதாக சொல்வார்கள். இதுவும் தவறு. அவைகளைவிட, மல்லாக்கொட்டையில்தான் சத்துக்கள் அதிகம்.
சிறந்த உணவு: மல்லாக்கொட்டையை சாப்பிட்டால், உடலில் எடை கூடும் என்பார்கள். அதுவும் தவறு.. உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி மல்லாக்கொட்டைகளுக்கு உண்டு. அதனால் தாராளமாகவே சாப்பிடலாம்.. காரணம், ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளதால், இதய வால்வுகளை பாதுகாக்க செய்கிறது.. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழக்கூடிய மல்லாக்கொட்டையில்தான், மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு உள்ளது.. அதாவது, 100 கிராம் மல்லாக்கொட்டையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது உள்ளது.. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
No comments