இந்த 4 ராசிக்காரர்களை மட்டும் சனி பகவான் அதிகம் படுத்துவார்: காரணம் என்ன? பரிகாரம் என்ன?
நவகிரகங்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் சனி பகவான். சனீஸ்வரர் ஒருவர் மீது பிரியத்தை காட்ட துவங்கிவிட்டால், அவர் மேல் அதிர்ஷ்ட மழை பொழியும். ஆனால், அவர் கோவத்துக்கு நாம் ஆளானால், நடு வீதியில் கொண்டு வந்து விட்டு விடுவார்.
ஆகையால், தங்கள் ராசி மீது சனி பகவானின் (Lord Shani) மகிழ்ச்சிகரமான பார்வை இருக்கிறதா அல்லது கோவமான பார்வை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
பார்க்கப்போனால், நாம் செய்யும் கர்மாக்களின் அடிப்படையில்தான் சனி பகவான் நமக்கு பலன் தருகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, அவருக்கு சில நட்பு ராசிகள் மற்றும் எதிரி ராசிகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் அவரவர் ராசிக்கேற்ப பலன்களையும் கொடுக்கிறார். சனிபகவானுடன் பகை உணர்வு உள்ள ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் விதியால், பிறக்கும் போதே, சனி கிரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் பிறக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.
சனி பகவான் அளிக்கும் கெட்ட பலன்கள்
சனி பகவானின் எதிரி ராசியில் உள்ள ராசிக்காரர்களுக்கு அவர் பல தொல்லைகளை அளிக்கிறார். ஆனால் சனியின் பார்வை ஒரு நபருக்கு எந்த அளவு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பது அவரது ஜாதகத்தில் சனியின் நிலை மற்றும் அவரது செயல்களைப் பொறுத்தது. ஒரு நபர் செய்யும் செயல்கள் நன்றாக இருந்து, அவர் அவ்வப்போது சனி பகவானுக்கு பிரீதியான செயல்களை செய்துகொண்டிருந்தால், அந்த நபருக்கு சனி தோஷமும் சனியின் தாக்கமும் குறைவாக இருக்கும்.
அப்படி இல்லாவிட்டால், சனிபகவான் எதிரி ராசிக்காரர்களின் வேலை, வியாபாரம், திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறார். இதன் காரணமாக, ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் இவற்றில் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்கிறார்.
இவைதான் சனி பகவானின் எதிரி ராசிகள்:
மேஷம் மற்றும் விருச்சிகம்: மேஷம் மற்றும் விருச்சிக (Scorpio) ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆகும். சனி பகவான் செவ்வாயுடன் பகை உணர்வு கொண்டவர். ஆகையால், இந்த இரண்டு ராசிக்காரர்கள் மீது சனிபகவானின் தீய பார்வை பட வாய்ப்புகள் அதிகம்.
கடகம் மற்றும் சிம்மம்: கடகம் (Cancer) மற்றும் சிம்ம ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். சனி பகவானின் எதிரி பட்டியலில் சந்திரனின் பெயர்தான் முதலில் வரும். ஆகையால், இந்த ராசிக்காரர்களும் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
இந்த விஷயங்கள் சனி பகவானின் கோபத்திலிருந்து உங்களை காப்பாற்றும்
சனிபகவானின் கோபத்தைத் தவிர்க்க, இந்த ராசிக்காரர்கள் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக ஏழரை நாட்டு சனி நடக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் தானங்களை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை வைத்து (முடிந்தால் வெண்கலப் பாத்திரத்தில்) அதில் தங்கள் முகத்தைப் பார்ப்பது தோஷத்தை குறைக்க உதவும் என கூறப்படுகின்றது. பின்னர் அந்த எண்ணெயை ஒருவருக்கு தானமாக கொடுக்க வேண்டும். அல்லது சனி பகவானின் கோவிலில் வைத்து விடலாம். இது தவிர நாய்க்கு உண்ண ஏதாவது வாங்கி கொடுப்பது, ஏழை, எளியோருக்கு உதவுவது போன்றவையும் பலன் தரும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
No comments