பூ போல் ஒட்டாமல் உதிரி உதிரியாக இடியாப்பம் செய்ய வேண்டுமா.?
இடியாப்பம் என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும்.பொதுவாக ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் நம் உடல் நலனுக்கு ஆரோக்கியமானது என்று கூறுவர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற எளிய உணவாக
இடியாப்பம் உள்ளது. வீட்டிலேயே இந்த இடியாப்பத்தை பூ போன்று மென்மையாக
செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கே இந்த ரெசிபி...
தேவையான பொருட்கள் :
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு அகலமான பாத்திரத்த்தில் அரிசி மாவை போட்டு அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள தண்ணீரை மாவில் சேர்த்து நன்கு கிளரவும்.
மாவானது இடியாப்பம் பிழிய தேவையான பதத்திற்கு வரும்வரை பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து தயார் செய்து வைத்துள்ள மாவை எடுத்து இடியாப்பம் அச்சில் வைத்து வட்டமான தட்டில் இடியாப்பம் பிழியவும்.
இதை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இடியாப்பம் வெந்ததும் எடுத்து பார்த்தால் அது பஞ்சு போல மென்மையாக இருக்கும்.
அவ்வளவுதான் தயாரான இடியாப்பத்தின் மேல் துருவிய தேங்காயை சேர்த்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :
- அரிசி மாவு - 2 டம்ளர்
- தண்ணீர் - 3 டம்ளர்
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப

No comments