டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்.. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது..!!
நம்
வாழ்க்கையில் இளமை பருவத்தில் சாதனையாகக் கருதும் சில விஷயங்களில் மிக
முக்கியமானது, வாக்காளர் அட்டை வாங்குவதும், ஓட்டுநர் உரிமம் வாங்குவதும்
தான்.
தற்போது மத்திய அரசு வாக்காளர் அட்டை பெறுவதை எளிமையாக்கியுள்ள வேளையில்,
ஓட்டுநர் உரிமம் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.வருகிற ஜூன் 1, 2024 முதல்
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த
மாற்றங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வோம்.புதிய ஓட்டுநர்
உரிமத்திற்குத் தேவையான ஆவணங்களைச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்
அமைச்சகம் அப்டேட் செய்துள்ளது. புதிய விதிகள் இரு சக்கர வாகனம் மற்றும்
நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாறுபடுகின்றன. இந்த மாற்றம் ஆர்டிஓக்களில்
ஆவணங்கள் பரிசோதனைகளின் தேவையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன்
மூலம் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குகிறது.இதேபோல் தனியார் வாகன பயிற்சி
மையங்களுக்கான விதிகளும் மாற்றப்பட்டு உள்ளது.மாற்றங்கள் என்ன?: இனி
ஓட்டுநர் உரிமம் பெற அரசுப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) ஓட்டுநர்
திறன் தேர்வு எழுத வேண்டியதில்லை.
தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான தகுதிகள்: இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்கக் குறைந்தது 1 ஏக்கர் நிலம் தேவை. கனரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவை. இந்த மையங்களில் தகுந்த தேர்வு நடத்துவதற்கான வசதிகள் இருக்க வேண்டும்.பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், உயிரியல் அளவியல் (Biometrics) மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்திருக்க வேண்டும்.பயிற்சி காலம்: இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி குறைந்தது 4 வாரங்கள் (29 மணி நேரங்கள்) கொண்டதாக இருக்கும். இது கோட்பாடு மற்றும் நடைமுறை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். தியரி பயிற்சி 8 மணி நேரங்களும், பிராக்டிக்கல் பயிற்சி 21 மணி நேரங்களும் கொண்டதாக இருக்கும்.கனரக வாகனங்களுக்கான பயிற்சி 6 வாரங்கள் கொண்டதாக இருக்கும். இதில் தியரி பயிற்சி 8 மணி நேரங்களும், பிராக்டிக்கல் பயிற்சி 31 மணி நேரங்களும் கொண்டதாக இருக்கும்.மாற்றத்தின் நோக்கம்: இந்த விதி மாற்றத்தின் மூலம், இலகு மற்றும் கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும்.
மேலும் இந்த தனியார் அமைப்புகளை மத்திய அரசு உரிய முறையில் சோதனை செய்து அங்கீகாரம் அளிக்கும்.கட்டணங்கள்:கற்றவர் உரிமம் கட்டணம் - ரூ.200கற்றவர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் - ரூ.200சர்வதேச உரிமம் கட்டணம் - ரூ.1000நிரந்தர உரிமம் கட்டணம் - ரூ.200ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிப்பது எப்படி?: தமிழ்நாட்டில் வாகனம் இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் (Driving Licence) அவசியம். இதனைப் பெறுவதற்கான செயல்முறை எளிதானது தான். ஆனால், சில விஷயங்களில் தெளிவு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் குழப்பமடைவதுண்டு. எனவே, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை விரிவாகப் பார்ப்போம்.1. இணையதளத்தில் பதிவு: முதலில், மத்திய அரசின் பரிவாகன் சேவை (Parivahan Sewa) இணையதளத்திற்கு (https://parivahan.gov.in/) செல்ல வேண்டும்.
இது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு போன்ற போக்குவரத்து சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும்.2. விண்ணப்பப் படிவத்தைத் தேர்ந்தெடு (Select Driving Licence Apply Option): முகப்புப் பக்கத்தில் (Homepage) "ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிப்பு" (Driving Licence Apply) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனைத் தேர்ந்தெடுக்கும் போது, LEARNER'S LICENCE (கற்றவர் உரிமம்) அல்லது PERMANENT LICENCE (நிரந்தர உரிமம்) என இரண்டு விருப்பங்கள் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.3. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப, விண்ணப்பப் படிவம் திறந்து வரும்.
இந்தப் படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து (Print) தேவைப்பட்டால் பின்னர் பூர்த்தி செய்து கொள்ளலாம். இணையதளத்திலேயே பூர்த்தி செய்வதே எளிதானது.4. தேவையான தகவல்களை வழங்குதல்: விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் (பெயர், முகவரி, தொலைப்பேசி எண் போன்றவை) கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும். தவறுகள் இருந்தால், பின்னர் திருத்தம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.டிசைன் டிசைனா ஏமாத்துறாங்கப்பா..
நடிகர்கள், இன்ஃபிளூயன்சர்களை டார்கெட் செய்யும் ஓலா கார் ஓட்டுநர்!5. ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தல்: விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை (Scanned Copies) பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும். பொதுவாக, இந்த ஆவணங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரிச் சான்று, பிறப்புச் சான்று போன்றவை அடங்கும். தற்போது செய்யப்பட்ட மாற்றங்கள் இது தான், ஆவணங்கள் அனைத்தும் முன்கூட்டியே அரசின் சர்வருக்கு அப்லோடு செய்து ஒப்புதல் பெறப்பட்டு விடும்.6. ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமர்ப்பித்தல்: இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பின்னர், ஓட்டுநர் உரிமம் வழங்கும் அலுவலகம் (Regional Transport Office - RTO) சென்று தேவையான ஆவணங்களின் நகல்-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.7. ஓட்டுநர் திறன் சோதனை: ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அடுத்த கட்டமாக ஓட்டுநர் திறன் சோதனைக்கு (Driving Skill Test) தயாராக வேண்டும்.

No comments