இது தெரியுமா ? இனி கூகுள் பே ஆப் மூலமாகவே ஈசியா கடன் வாங்கலாம்!
கூகுள் பே மூலம் ரூ. 9,00,000 வரை கடன் பெறமுடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.கூகுள் பே மூலமாக இந்த கடன் தொகை வாங்க கிடைக்கிறது.
ஆனால், இதை கூகுள் பே நிறுவனமே நேரடியாக வழங்குகிறது என்பது பொருளல்ல. கூகுள் பே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த பல கடன் வழங்கும் நிறுவனத்தின் மூலம் இந்த தொகை இப்போது உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்பதே உண்மையாகும். ஆகையால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் வழங்கும் வல்லுனரை சரியாக தேர்வு செய்யுங்கள்.
1. உங்கள் மொபைல் போனில் Google Pay செயலியைத் திறக்கவும்.
2.உங்கள் கூகுள் பே ஆப்ஸ் விருப்பங்களில் இருந்து, கேட் லோன் (Get Loan) என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அப்பளை நவ் (Apply Now) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது கூகுள் பே உங்களை மற்றொரு பக்கத்திற்கு அழைத்து செல்லும்.
3.ரூ. 9 லட்சம் வரை கடன் பெறலாம். குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து கடன் பெறலாம். மாதாந்திர EMI ரூ. 1,000 முதல் தொடங்குகிறது. கடன் தொகையின் அடிப்படையில் இஎம்ஐ-யும் மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் காலம் 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
4.கடன் வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை, இது 13.99 முதல் தொடங்குகிறது. இப்போது நீங்கள் ஆப்-ல் உள்ள பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி விவரங்கள் தோன்றும். Continue விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் current address pincode-ஐ உள்ளிடவும். பின்னர் Next விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
5.உங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து, உங்கள் சிபில் ஸ்கோர் (Cibil Score) மதிப்பெண்ணை கணக்கிடப்படும். அதை வைத்து, உங்களுக்கு கிடைக்கும் தொகை பற்றிய விபரங்கள் திரையில் காண்பிக்கப்படும். ரூ. 10,000 முதல் ரூ. 9 லட்சம் இடையிலான தொகை உங்களுக்கு கடனாக வழங்கப்படும். நீங்கள் எடுக்கும் தொகைக்கான தவணை விபரம் மற்றும் EMI விபரம் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
ஆப் மூலமாக கடன் வாங்குவதற்கு இதுபோன்ற நிறைய வழிகளும் நிறைய செயலிகளும் உள்ளன. ஆனால் கடன் பெறுவதற்கு முன்னர் அந்த செயலி தொடர்பான விவரங்கள், கடனுக்கான வட்டி, திருப்பிச் செலுத்தும் காலம் போன்ற விஷயங்களையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் மோசடிகளில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.
No comments