Breaking News

ஆஹா செம! செல்போனில் இனி ஒரு நிமிடத்தில் 100% சார்ஜ் ஏறிடும்! டெக் உலகை திருப்பி போடும் கண்டுபிடிப்பு

 


செல்போன்கள் மற்றும் லேப்டாப்பிற்கு ஒரே நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறக்கூடிய புதிய தொழில் நுட்பம் ஒன்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த குப்தா என்பவர் கண்டறிந்துள்ளாராம்.

இதேபோல் மின்சார கார்களுக்கு 10 நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடுமாம்.

செல்போன்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல், தற்போது மின்சார கார்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இத்தகைய எலக்ட்ரானிக் கருவிகளை நாம் சார்ஜ் ஏற்றி பயன்படுத்தி வருகிறோம். எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பவர்கள்.. சார்ஜ் ஏறும் சில மணி நேரங்கள் கூட தவித்து போய்விடுவார்கள்.

செல்போன், லேப்டாப்: இன்னும் சொல்லப்போனால், சார்ஜ் ஏறும் நேரம் மட்டும் தான் செல்போன்களுக்கு ரெஸ்ட் கிடைக்கிறது என்று வேடிக்கையாக பல மீம்ஸ்களை பார்த்து இருக்கலாம்... செல்போன்களில் தற்போது விரைவாக சார்ஜ் ஏறக்கூடிய திறன் கொண்ட பேட்டரிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் தற்போது அறிமுகம் ஆகி வருகின்றன. ஆனாலும் எப்படி பார்த்தாலும் ஏறத்தாழ ஒரு மணி நேரமாவது ஆகிவிடும்.

இதனால் ஸ்மார்ட் போனே கதியென கிடப்பவர்களும், அடிக்கடி லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலரும் சில நிமிடங்களில் சார்ஜ் ஏறுவது போன்ற தொழில்நுட்பத்தை எப்போதுதான் கண்டுபிடிப்பார்களோ என நினைப்பார்கள்.. அதேபோல மின்சார கார்களுக்கு முழுமையாக சார்ஜ் செய்ய பல மணி நேரம் தேவைப்படுகிறது.

ஒரே நிமிடத்தில் 100% சார்ஜ்: இதனால், விரைவாக சார்ஜ் ஏறும் வசதியுடன் வந்தால்.. இன்னும் வசதியாக இருக்கும் என்று எல்க்ட்ரிக் கார்கள், பைக்குகள் வைத்திருப்பவர்கள் நினைப்பார்கள்.. இந்த நிலையில்தான், செல்போன்கள், லேப்டாப்பிற்கு ஒரே நிமிடத்தில் சார்ஜ் ஏறக்கூடிய புதிய தொழில் நுட்பம் ஒன்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த குப்தா என்பவர் கண்டறிந்துள்ளாராம். இது குறித்த விவரம் வருமாறு:-

இந்திய வம்சாவளி பேராசிரியர்: அமெரிக்காவின் கொலோரடோ பவுல்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பேராசிரியர் அன்குர் குப்தா மற்றும் அவரது குழுவை சேர்ந்த ஆய்வாளர்கள் செல்போன்கள், மின்சார கார்களுக்கு அதிவிரைவாக சார்ஜ் ஏறக்கூடிய தொழில் நுட்பத்தை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டு புதிய தொழில் நுட்பட்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புகளின் படி, செல்போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவகளை 0 - 100 சதவிகித சார்ஜ்ஜை ஒரே நிமிடத்தில் ஏற்ற முடியும். மின்சார கார்களுக்கு 10 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியுமாம். இந்த தகவல் நேஷனல் அகடமி சயின்ஸ் என்ற ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சார்ஜ் துகள்கள் நகர்வு: நுண்ணிய துளைகளின் சிக்கலான வலையமைப்பிற்குள் அயனிகளின் இயக்கம் - சிறிய சார்ஜ் துகள்கள் நகர்வை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பத்தை கண்டறிந்த குப்தா கூறுகையில்,

"சூப்பர் கேபாசிட்டர் போன்ற திறன்வாய்ந்த கருவிகளை கண்டுபிடிப்பது தற்போதைய கண்டுபிடிப்பு மூலம் வேகப்படுத்தப்படும்" என்றார். ஒரு சூப்பர் கேபாசிட்டர் என்பது ஒரு ஆற்றல் சேமிப்பு சாதனம் (energy storage device ) என்று குறிப்பிட்ட குப்தா, அது அவற்றின் துளைகளில் உள்ள அயனி சேகரிப்பைப் பொறுத்தது

No comments