Breaking News

மே 31 கடைசி.. ஆதார், பான் அட்டை வச்சிருந்தா அலெர்ட்.. இரு மடங்கு வரி போகும்.. ஏன்?

 

ற்போது வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் சிம் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் (Aadhaar) கார்டு தேவைப்படுகிறது.

மேலும் ஆதார் போன்று பான் (PAN) கார்டும் ஒரு முக்கியமான அரசு ஆவணமாக கருதப்படுகிறது.

குறிப்பாக அரசாங்க சலுகைகளை பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கூடுதல் வரிப் பிடித்தங்களைத் தவிர்ப்பதற்கு வரும் மே 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பல்வேறு முறைகேடுகளைத் தடுப்பதற்காக அனைத்து அரசு சேவைகளுமே ஆதார் இணைப்பை தற்போது கட்டாயமாக்கியுள்ளன. அதன்படி வருமான வரி செலுத்துவதற்கான முக்கிய ஆவணமான பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

குறிப்பாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிவடைந்தது. அதன்பின்பும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்குத் தாமத கட்டணமாக ரூ.1000 வசூல் செய்யப்பட்டது. பின்பு ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகளை செயலற்றதாகிவிடும் என்று வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர் வரும் மே 31-ம் தேதிக்குள் தங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது சமீபத்தில் வருமான வரித்துறை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு என்னவென்றால், வரும் மே 31-ம் தேதிக்குள் உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுங்கள். ஒருவேளை இணைக்கவில்லை என்றால் நீங்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வருமானவரி தாக்கல் செய்வதற்கு வரும் ஜூன் 31ஆம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில் மே 31-ம் தேதிக்குள் உங்களது பான் எண்ணையும் ஆதாரையும் இணைத்து விடுங்கள் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கையில், மே 31-ம் தேதிக்குள் பான் ஆதார் இணைப்பு முடிவடைந்தால் டிடிஎஸ்-க்கான குறுகிய கழிப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. ஆனால் இது தவறும் பட்சத்தில் டிடிஎஸ் இருமடங்காகப் பிடித்த செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் வழிமுறைகளைப் பார்க்கலாம். அதாவது https://www.incometax.gov.in/iec/foportal என்ற தளத்தில் Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து PAN, Aadhaar எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து உங்களது அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என கண்காணித்து Link Aadhaar என்பதை கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை இதில் உள்ளிட்டு validate button கிளிக் செய்ய வேண்டும். ஆனால் தற்போது இதற்காக நீங்கள் ரூ.1,000 அபராதமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments