Breaking News

காலையில் இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது அதிக நன்மை தரும்!

 


ஆரோக்கியமாக இருக்க உடல் உழைப்பு அவசியம். உடலுக்கு தினசரி வேலை கொடுக்க வேண்டும்.

அப்போது தான் எந்தவித கெடுதல்களையும் செய்யாது. மருந்துகளை சாப்பிடுவது தவிர காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. காலையில் எழுந்ததும் உங்களால் முடிந்த தூரத்திற்கு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் காலையில் எந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இதன் காரணமாக ஒருசிலர் காலையில் எழுந்து 4-5 மணிக்கு வாக்கிங் செல்கின்றனர், சிலர் வேலை பளு காரணமாக மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

ஆனால் எந்த ஒரு வேலையை செய்வதற்கும் சரியான நேரம் இருப்பது போலவே, நடைப்பயிற்சி செய்வதற்கும் குறிப்பிட்ட சில நேரம் உள்ளது. உங்கள் உடல் கலோரிகளை எரிக்க நடைபயிற்சிக்கும் சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் நடப்பது உடலுக்கு ஏராளமான வைட்டமின் Dஐ வழங்கி, உடலை எடை இழப்பிற்கு உதவுகிறது. உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகள் எரிக்க காலையில் நடைப்பயிற்சி செய்ய சரியான நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் நடப்பது நல்லது?

நீங்கள் உடல் எடையை குறைக்கவும், தேவையற்ற கலோரிகளை விரைவாக எரிக்கவும் விரும்பினால், காலையில் 7 மணி முதல் 9 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. காலையில் இந்த 2 மணி நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாக பல சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது நமது வளர்சிதை மாற்றம் வேகமாகவும், உடல் எடையை குறைக்கவும் கலோரிகளை எரிக்கத் தொடங்குகிறது. மேலும் காலையில் இந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான வைட்டமின் D கிடைக்கிறது, இது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

அதே போல மாலையில் நடைப்பயிற்சி செய்வதும் நன்மை பயக்கும். குறிப்பாக இரவு சாப்பிட பிறகு 15 முதல் 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் போதும். இதை தினசரி பழக்கமாக்குவதால் உடலில் கொழுப்பு சேராது, அதே சமயம் உடல் பருமனும் அதிகரிக்காது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்குவது நல்லது. உடல் எடையை குறைக்க நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். இவை நடைபயிற்சி நேரத்தில் மட்டும் 10,000 அடிகள் நடந்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். சுமார் 1 மணிநேரம் கணக்கு வைத்து அல்லது 6 கிலோமீட்டர்கள் நடந்தால் உங்களால் எளிதில் 10 ஆயிரம் அடிகளை முடிக்க முடியும். தினமும் 1 மணி நேரம் நடப்பது உடல் பருமனைக் குறைப்பது மட்டும் இல்லாமல் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

No comments