Breaking News

மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமா? என்ன சொல்கிறது வருமான வரி சட்டம்..

 


இந்தியாவில் தற்போது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த நிலையில் மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமா என்பது குறித்தும், இதிலிருந்து யாருக்கெல்லாம் விதிவிலக்கு கிடைக்கிறது என்பது குறித்தும் இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கலாம்.இந்தியாவில் பொதுவாக 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறார்கள் என்றால் அவர்கள் கட்டாயம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய கணக்கு தாக்கல் முறையிலும் சரி, பழைய கணக்கு தாக்கல் முறையிலும் சரி இது தான் உச்சக்கட்ட வருமான வரம்பு.நம் வருமான வரிச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் தனிநபர் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 80 வயதுக்குட்பட்டவர்களை மூத்த குடிமக்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வருகிறது. அதேபோல 80 வயது மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் சூப்பர் சீனியர் சிட்டிசன் என்ற பிரிவில் வருகிறார்கள்.கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 194பி-இன் அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு பெறுகிறார்கள்.இதன்படி இந்திய குடிமகனாக இருக்கக்கூடிய 75 வயதுக்கு மேற்பட்ட நபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேவையில்லை. குறிப்பாக ஓய்வூதியம் மற்றும் டெபாசிட்டுகளில் இருந்து கிடைக்கும் வட்டிகள் மூலம் வருவாய் பெறுபவர்களும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் அவர்கள் வங்கி கணக்கின் மூலம் இந்த வட்டி மற்றும் ஓய்வூதிய தொகைகளை பெறுவதால் , வங்கியின் டிடிஎஸ் உள்ளிட்டவற்றை பிடித்தம் செய்து கொள்ளும்.75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் , ஆண்டுக்கு ஒரு முறை வங்கிகளிடம் குறிப்பிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தாலே போது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாமல் இருப்பதற்கும் வங்கிகளில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு வரையறுத்துள்ள வங்கிகளில் மட்டுமே இது அமலாகும்.60 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்களுக்கான வரி விலக்குகள் போக வருமானம் இருந்தால் 3% முதல் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் கட்டாயம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்

No comments