Breaking News

வெறும் 50 ரூபாய் போதும்.. பழைய சீலிங் Fan கூட புதுசு போல ஸ்பீடா சுற்றும்.. எலெக்ட்ரிசியனே தேவையில்லை..

 


ங்கள் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேனின் (Ceiling Fan) வயது என்னவிருக்கும்? உங்கள் வீட்டில் மிகவும் பழமையான ஃபேன் (Old fan) இருந்தாலும் கூட, அதன் வேகத்தை புது ஃபேன் (New fan) போல வெறும் 50 ரூபாய் செலவில் மாற்றலாம்.

என்னது? வெறும் 50 ரூபாய் (Rs 50) செலவில் எவ்வளவு பழைய ஃபேன் ஆக இருந்தாலும், அதன் வேகத்தை சூப்பர் ஸ்பீட் (Super speed) ஆக மாற்ற முடியும். ஆம், புதிய ஃபேன் இல் இருக்கும் வேகத்தை போல, உங்கள் பழைய ஃபேனை சுழல வைக்க முடியும் மக்களே. எப்படி உங்கள் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் வேகத்தை சில நிமிடங்களில் அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மிகவும் பழைய சீலிங் ஃபேன் கூட புதுசு போல சூப்பர் ஸ்பீடா சுற்றுமா? அதுவும் வெறும் 50 ரூபாய் செலவில்லா?

அதற்கு முன், உங்கள் சீலிங் ஃபேனின் வேகம் குறைய என்ன காரணம் (reasons for a ceiling fan to slow down speed) என்பதையும் தெரிந்துகொள்ளலாம். பிறகு, எப்படி அதன் வேகத்தை எளிய வழியில் சூப்பர் ஸ்பீட் ஆக மாற்றலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். உங்கள் வீட்டில் உள்ள சீலிங் ஃபேன் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். தினமும் சுழன்றுகொண்டே இருப்பதனால், காற்றில் இருக்கும் தூசிகள் (dust) உங்கள் ஃபேனின் இறெக்கையில் படிந்துகொள்ளுங்கள்.

நாட்கள் கடக்க-கடக்க, உங்கள் ஃபேனின் றெக்கையில் (fan wings) படியும் தூசியின் (dust) அடர்த்தி அதிகமாகிக் கொண்டே இருக்கும். இதனால், உங்கள் ஃபேனின் வேகம் 50% குறைய அதிக வாய்ப்புள்ளது. றெக்கைகளில் தூசி இருந்தால், காற்றும் மெதுவாகவே வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் உங்கள் ஃபேனை ஒழுங்காக பராமரிக்க வேண்டும் (ceiling fan maintenance). இதை ஒழுங்கான முறையில் செய்து வந்தாலே உங்கள் ஃபேன் வேகம் வேகமாக இருக்கும்.

உங்கள் சீலிங் ஃபேன் றெக்கையில் உள்ள தூசியை சுத்தம் செய்வதற்கு முன் (how to clean ceiling fan wings at home), உங்கள் ஃபேன் ஸ்விட்ச் ஆஃப் (OFF) செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். பிறகு ஒரு ஈரமான துணியை வைத்து, மெருதுவாக ஃபேனின் றெக்கையை ஒன்றின் பின் ஒன்றாக துடைக்கவும். ஃபான் றெக்கையின் மேற்புறம் மற்றும் அடியில் என்று எல்லா பக்கமும் துடைத்து தூசியை எடுக்க வேண்டும்.

உங்கள் சீலிங் ஃபேன் வேகம் குறைய என்ன காரணம் தெரியுமா? (Do you know what is causing your ceiling fan to slow down):

இதை 2 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்று சுத்தம் செய்து வரலாம் (how often you need to clean fan wings). இப்படி சுத்தம் செய்து வருகையில் உங்கள் ஃபேன் தூசியுடன் அதிகம் அழுத்தும் கொடுத்து சுழல வேண்டிய அவசியமிருக்காது. ஃபேனின் ஆயுளும் அதிகரிக்கும். அடுத்தபடியாக, உங்கள் சீலிங் ஃபேனின் வேகம் குறைய அதில் உள்ள கன்டென்ஸர் (fan condenser) ஒரு காரணமாகும்.

நீண்ட நாள் சர்வீஸ் செய்யாமல் (fan service) சுழண்டுகொண்டிருக்கும் ஃபேன்களின் வேகம் குறைய இதுவே முக்கிய காரணம். உங்கள் ஃபேனில் சிறிய வெள்ளை நிற சிலிண்டர் (cylinder) வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கன்டென்ஸர் தான் உங்கள் சீலிங் ஃபேன் வேகத்தை (ceiling fan speed) நிர்வகிக்கிறது. இவை வெறும் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் விலையில் எலெக்ட்ரிக் கடைகள் (electrical shop) மற்றும் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கிறது.

மொத்த விலை கடையில் இது வெறும் ரூ. 40 அல்லது 50 ரூபாய் விலைக்கு வாங்க கிடைக்கும். இதை எலெக்ட்ரிசியன் உதவி இல்லாமல், நீங்கள் உங்கள் கைப்பட மாற்றம் செய்யலாம். உங்கள் சீலிங் ஃபேனில் இருக்கும் கன்டென்ஸர் வயர் கனெக்ஷனை ஒரு போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பார்த்து, நீங்கள் வாங்கிய புதிய கன்டென்ஸரை ஃபேனில் மாற்றிக்கொள்ளுங்கள்.

இதை மட்டும் செய்தால் போதும், உங்கள் பழைய சீலிங் ஃபேன் கூட, புதிய பேன் போல சூப்பர் ஸ்பீட் இல் இனி காற்றை வீசும்.

No comments