Breaking News

கோடை விடுமுறை - புது அப்டேட் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

 

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்படும் நிலையில், ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதால், ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் உத்தரவின்படி, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசி வருவதால், பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில், ஜூன் 9-ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், ஜூன் 10-ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் எனவும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அறிவித்துள்ளார்.

இது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமின்றி, அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments