வேலைக்கு ஆட்கள் தேவை... ஆர்டர்கள் குவிவதால் டாலர் சிட்டிக்கு ஜாக்பாட்:
திருப்பூரில் நூல் விலை குறைவு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்களால் வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
திருப்பூரில் கொரோனா ஊரடங்கின்போது பருத்தி, நூல் உள்ளிட்ட
மூலப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. மேலும் சர்வதேச பொருளாதார
மந்தநிலையால் வெளிநாட்டு ஆர்டர்களும் குறைந்தன.
இந்நிலையில், நூல் விலை படிப்படியாக குறைந்ததுடன், வெளிநாட்டு ஆர்டர்களும் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இதனால், திருப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் "வேலைக்கு ஆட்கள் தேவை" என்ற அறிவிப்புப் பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆர்டர்கள் குவிவதால், வாரத்தின் 7 நாட்களும் வேலை இருப்பதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் தற்போது 6 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வேலை இன்றி சொந்த ஊர் சென்றவர்கள், திருப்பூருக்குத் திரும்பினால் தொழில் வளர்ச்சி அடையும் என்று நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
: "நியூஸ் கிளிக்" செய்தி இணையதள ஆசிரியர் விடுதலை.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதேபோன்று, மத்திய மற்றும் மாநில அரசுகள் வங்கி மூலம் கடன் உதவி செய்தால், திருப்பூரில் தொழில் பாய்ச்சல் பன்மடங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

No comments