Breaking News

20% முதல் 80% வரை.. போன் ஃசார்ஜ் போடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா..!

 

 பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

பேட்டரி லைஃப், டிஸ்ப்ளே, கேமரா குவாலிட்டி என அனைத்தையும் ஆராய்ச்சி செய்தே மக்கள் வாங்குகின்றனர். இதுபோல பார்த்து பார்த்து வாங்கும் ஃபோனுக்கு எப்பொழுது சார்ஜ் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கிய பிறகு சற்று பேட்டரி குறைந்தாலே, உடனே எடுத்து சார்ஜ் செய்து விடுகிறோம். ஆனால் நாம் செய்யும் முறை சரியா..

என்பதை தெரிந்துகொள்ள மறுக்கிறோம். எனவே, எப்பொழுதெல்லாம் உங்கள் போனை சார்ஜ் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். வெப்பம் மிகுந்த இடங்களைத் தவிர்க்கவும்: ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் செய்யும்போது வெப்பம் மிகுந்த இடங்களில் வைக்காதீர்கள். அதற்காக உங்களை நான் பிரிட்ஜில் வைக்க சொல்லவில்லை.

குளிர்ந்த இடங்களில் வைத்து சார்ஜ் செய்யுங்கள். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் சார்ஜ் செய்யும் போது போன் சூடாகும். அதோடு சூரிய ஒளி படும் இடங்களில் சார்ஜ் செய்வது வெப்பம் மிகுந்த இடங்களில் வைத்து சார்ஜ் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம். வீட்டிற்குள் எப்படி சூரிய ஒளி வரும் என்று கேட்காதீர்கள்..

சில வீடுகளில் முற்றம் இருக்கும் அதுபோன்ற வீடுகளுக்குள்ளும் சூரிய வெளிச்சம் மற்றும் சூரிய வெப்பம் படும். 20 சதவீதம் அல்லது அதற்கு கீழ் சார்ஜ் இருக்கும்போது சார்ஜ் செய்யவும்: பெரும்பாலும் ஃபோன் சார்ஜ் 5 சதவீதம் அல்லது 0 சதவீதமாகும் போது தான் சார்ஜ் செய்ய தொடங்குகிறோம். ஆனால் இது ஃபோனின் பேட்டரி ஆயுட்காலத்தை குறைக்கலாம். 20 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கும்போது, உங்கள் மொபைல் ஃபோனை சார்ஜ் செய்ய ஆரம்பிக்கவும்.

சிலர் 70 சதவீதம் மற்றும் 60 சதவீதம் சார்ஜ் இருக்கும்போதே திரும்பவும் சார்ஜ் செய்கின்றனர், இதுவும் தவறுதான். 80 சதவீதம் அல்லது 90 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்: உங்கள் மொபைல் ஃபோனை 100% சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும். 80 அல்லது 90 சதவீதம் சார்ஜ் செய்தால் ஃபோன் பேட்டரி அதிக நாள் இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் முறையைத் தவிர்க்கலாம்: தற்போதெல்லாம் வரும் ஸ்மார்ட் ஃபோன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற முறை உள்ளது.

இது போன்ற ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை பயன்படுத்துவதால் அரை மணி நேரத்திற்குள் நீங்கள் சார்ஜ் செய்யலாம். இதனால் உங்கள் ஃபோன் அதிகம் சூடாகும். எனவே, இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது. இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டாம்: இது பலரது பழக்கமாக இருக்கிறது.

பகல் முழுவதும் ஃபோனை பயன்படுத்தி விட்டு, அதன் பிறகு இரவு நேரங்களில் சார்ஜ் செய்வது. பின்பு அதனை மறந்து விட்டு தூங்கி விடுவது. இது பேட்டரி சீக்கிரம் வீணாகும் அபாயத்தை ஏற்படுத்தலாம். அதற்கு பதிலாக தூங்குவதற்கு முன்பு சார்ஜ் செய்யலாம்.

பேட்டரி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில எளிய முறைகள்: 1. சாப்ட்வேர் அப்டேட்கள்: உங்களின் மொபைல் ஃபோன் சாப்ட்வேர் அப்டேட்களை அடிக்கடி புதுப்பித்து வைத்துக் கொள்ளுங்கள். இது பேட்டரி ஆயுளை மேம்படுத்தும். 2. மின்சாரம் மிச்சப்படுத்தும் முறைகள்: உங்கள் போனில் விளையாட்டு நிகழ்ச்சிகள் சினிமா போன்றவற்றைப் பார்க்கும்போது பேட்டரி சேவர் மோடு-ஐ ஆன் செய்து வையுங்கள். 3. போர்ட் மற்றும் கேபிள் சுத்தம்: சார்ஜ் போர்ட் மற்றும் கேபிள்களை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

No comments