Breaking News

ஒரு நம்பரை சேமிக்காமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

 


லகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு டீஃபால்ட் டெக்ஸ்டிங் அப்ளிகேஷனாக தற்போது வாட்ஸ்அப் மாறிவிட்டது என்று கூறும் அளவிற்கு இன்று வாட்ஸ்அப் அனைவராலும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
டெக்ஸ்ட் மெசேஜ்கள், வீடியோக்கள், போட்டோக்கள் அல்லது டாக்குமென்ட்களை அனுப்புவது அல்லது பெறுவது போன்றவற்றிற்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ஒரு சில நேரங்களில் ஒரு காண்டாக்ட் ஐ சேமிக்காமல் அவருக்கு வாட்ஸ்அப் மெசேஜை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

ஆனால் உங்களுடைய கான்டாக்ட் பட்டியலில் சேமிக்கப்பட்டுள்ள நம்பர்களுக்கு மட்டுமே உங்களால் வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்ப முடியும். ஆனால் ஒரு நம்பரை சேமிக்காமலேயே உங்களால் வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்ப முடியும். அதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


முறை 1:

  1. உங்களுடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் உள்ள வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறக்கவும்.

  2. நீங்கள் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை காப்பி செய்யவும்.

  3. கீழே காணப்படும் New Chat பட்டனை அழுத்தி வாட்ஸ்அப் காண்டாக்ட்களின் கீழ் உள்ள உங்களது பெயரை டேப் செய்யவும்.

  4. டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் காப்பி செய்த மொபைல் நம்பரை பேஸ்ட் செய்து Send என்பதை கிளிக் செய்யவும்.

  5. இப்போது மொபைல் நம்பரை டேப் செய்த பிறகு, அந்த நம்பர் வாட்ஸ்அப்பில் இருந்தால் உங்களால் Chat with ஆப்ஷனை காண முடியும்.

  6. இப்பொழுது அதனை டேப் செய்து அந்த நம்பரை சேமிக்காமலேயே உங்களால் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப முடியும்.


முறை 2:

  1. உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப்பில் உள்ள பிரவுசரை திறக்கவும்.

  2. அட்ரஸ் பாரில் கீழே உள்ள லிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx.

  3. xxxxxxxxxx இருக்கும் இடத்தில் நீங்கள் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை என்டர் செய்து கொள்ளவும்.

  4. மொபைல் நம்பருக்கு முன்பு நாட்டின் குறியீடு இருப்பதை உறுதி செய்யவும்.

  5. இப்போது லிங்கை திறக்க அதனை டேப் செய்து Chat ஆப்ஷனுக்கு செல்லவும்.

  6. இப்போது நீங்கள் அந்த நபரின் வாட்ஸ்அப் சாட்டிற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள். அவரது நம்பரை சேமிக்காமலேயே இப்போது உங்களால் அவருக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.


முறை 3:

  1. உங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் உள்ள Truecaller அப்ளிகேஷனை திறக்கவும்.

  2. இந்த அப்ளிகேஷனில் நீங்கள் மெசேஜ் அனுப்ப நினைக்கும் மொபைல் நம்பரை தேடி ஸ்க்ரோல் செய்து வாட்ஸ்அப் ஐக்கானை காணவும்.

  3. அதனை நீங்கள் டேப் செய்தால் வாட்ஸ்அப் சேட் விண்டோ திறக்கப்படும்.

  4. இதில் உங்களால் அந்த நம்பரை சேமிக்காமலேயே மெசேஜ் அனுப்ப முடியும்.


| உங்க செல்போன் மிஸ் ஆகிட்டா..? இனி கவலையே வேண்டாம்... ஆண்ட்ராய்டின் அசத்தலான புதிய அப்டேட்!

இந்த மூன்று வழிகளில் ஒன்றை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மொபைல் நம்பரை சேமிக்காமலேயே உங்களால் அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.

No comments