Breaking News

NEET UG 2024: விரைவில் நீட் தேர்வு ரிசல்ட்; டாப் கல்லூரிகளின் கட் ஆஃப் நிலவரம் இங்கே


நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET 2024) தேர்வை மே 5, 2024 அன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 571 நகரங்களில் நடத்தியது. நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்.

எனவே மாணவர்கள் என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) அடிப்படையில் இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்புகளை தெரிந்துக் கொள்வது அவசியம். தரவரிசை. எனவே, என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையின்படி முதல் 10 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் மற்றும் அவற்றின் எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் 10 மருத்துவக் கல்லூரிகளுக்கான கீழே குறிப்பிடப்பட்டுள்ள நீட் கட்ஆஃப் என்பது, குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான எதிர்பார்க்கப்படும் சதவீதம் என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும்:

டாப் கல்லூரிகளில் எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் சதவீதம்

1). டெல்லி எய்ம்ஸ் - 98 சதவீதம் அல்லது அதற்கு மேல்

2). PGIMER சண்டிகர் - 97-98 சதவீதம்

3). சி.எம்.சி வேலூர் - 95 சதவீதம்

4). நிம்ஹான்ஸ் பெங்களூரு - 94-95 சதவீதம்

5). ஜிப்மர் புதுச்சேரி - 92-94 சதவீதம்

6). அமிர்த விஸ்வ வித்யாபீடம் - 90-91 சதவீதம்

7). SGPGI லக்னோ - 90-91 சதவீதம்

8). BHU வாரணாசி - 88-89 சதவீதம்

9). கே.எம்.சி மணிபால் - 87-88 சதவீதம்

10). SCTIMST திருவனந்தபுரம் - 87-88 சதவீதம்


No comments