Breaking News

ஆதார் அப்டேட்.. இது தான் லாஸ்ட் சான்ஸ்.. ஆதாரில் இலவசமாக எதையெல்லாம் மாற்றலாம்? UIDAI புது Aadhaar அறிவிப்பு..

 

தார் அட்டை (Aadhaar Card) பயனர்களுக்கு இறுதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை தகவல்களை இலவசமாக மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கும் இறுதி காலக்கெடு நிறைவிடய வெறும் 14 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆதார் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆதார் அட்டை பயனர்கள் அவர்களின் ஆதார் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை இலவசமாக மாற்றம் செய்ய அனுமதிக்கும் இலவச அப்டேட் சேவைக்கான (Aadhaar free update) இறுதி காலவரை ஜூன் 14, 2024 ஆம் தேதியாக அறிவித்துள்ளது. இந்த இறுதி காலக்கெடுவை நினைவுபடுத்த, ஆதார் ஆணையம் மீண்டும் ஒரு முறை எந்தெந்த ஆதார் தகவல்களை மக்கள் இப்போது வரை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்ற விபரத்தை வெளியிட்டுள்ளது.

ஆதார் கார்டு தகவல்களை இலவசமாக மாற்றம் செய்ய லாஸ்ட் சான்ஸ் (Last chance to change Aadhaar card details for free):

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை பயனர்களின் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அனுமதிக்கிறது. இந்த இலவச சேவைக்கான காலக்கெடுவை UIDAI பலமுறை மாற்றி அமைத்து, இப்போது இறுதிக்கட்ட காலக்கெடுவுக்கு நெருங்கியுள்ளது. பொதுமக்களின் ஆதார் அட்டை விபரங்களை இலவசமாக அப்டேட் (Aadhaar card details free update) செய்துகொள்ள ஜூன் 14 தேதி இறுதிகட்ட காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் (Aadhaar card) பெற்ற தனிநபர்கள் தங்கள் அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI அறிவுறுத்துகிறது. அதேபோல், 5 மற்றும் 15 வயதிற்குள் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்களை அவர்களின் ஆதார் அட்டையில் புதுப்பிப்பதும் மிக முக்கியமானது என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழைந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 15 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளின் பால் ஆதார் அட்டை (Baal Aadhaar card), சாதாரண ஆதார் அட்டைக்கு மாற்றப்பட வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14ம் தேதி வரை ஆதார் அட்டையில் உள்ள மாற்றங்களை புதுப்பிக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

UIDAI வெளியிட்ட புது ஆதார் அப்டேட் அறிவிப்பு:

அதேபோல், இப்போது பொதுமக்கள் எந்தெந்த ஆதார் தகவல்களை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்ற முழு விபரத்தையும் (List of details you can change in Aadhaar for free of cost) ஆதார் ஆணையம் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தும் விதமாக வெளியிட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள தகவல் படி, எந்தெந்த தகவல்களை நாம் இலவசமாக மாற்றி பயன்பெறலாம் என்பதை பற்றி இப்போது தெளிவாக பார்க்கலாம்.

ஆதார் அட்டை தகவல்களில் எதை எல்லாம் இலவசமாக மாற்றாலம்?

1. புகைப்படம்

2. பெயர்

3. முகவரி

4. பிறந்த தேதி / வயது

5. பாலினம்

6. மொபைல் எண்

7. மின்னஞ்சல் முகவரி

8. உறவு நிலை மாற்றம்

9. தகவல் பகிர்வு ஒப்புதல்

10. கண் கருவிழி மற்றும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள்

ஆதார் அட்டையில் உள்ள போட்டோ (Aadhaar photo) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றம் செய்ய பொதுமக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். மற்ற ஆதார் விபரங்களை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும், அருகில் உள்ள ஆதார் மையம் வழியாகவும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்று UIDAI கூறியுள்ளது. ஜூன் 14, 2024 ஆம் தேதி வரை மட்டுமே மேற்கூறிய தகவல்களை மக்கள் இலவசமாக புதுப்பித்துக்கொள்ள முடியும்.

No comments