தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் அமலுக்கு வரும் 3 அசத்தலான திட்டம் - இது நம்ம லிஸ்டலேயே இல்லையே!
வருகின்ற ஜூன் 6-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக பள்ளிகள் திறக்கப்பட்டதும் மூன்று திட்டங்களை செயல்படுத்த செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் குழு ஒன்றும் தொடங்கப்பட உள்ளது.
இறுதியாக மாணவர்களின் கையில் கட்டும் வண்ண கயிறுகளுக்கு தடை விதிக்கவும் ஆலோசரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
பள்ளி மாணவர்கள் சாதியின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் வண்ண கயிறுகள் கட்டப்படுவதால், ஒரு சில தென் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதாகவும், இதை தடுக்கும் வகையில் இந்த வண்ணக் கயிறுகளுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க பள்ளிகளித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மாணவர்கள் கையில் வண்ணக் கயிறு கட்டப்பட்டு இருந்தால், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் குறித்த ஆபத்துகளை எடுத்துக் கூறி, அவர்களை தவறான பாதை செல்ல விடாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வுடன் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும் மாணவர்களின் செயல்பாடுகளை அவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்களின் செயல்பாடுகளை தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments