வினாத்தாள் திருத்தும் போது இப்படியா..! டீச்சரின் ஷாக் இன்ஸ்டா ரீல்
தங்களது அன்றாட நடவடிக்கைகளை ரீல்ஸ்களாக வெளியிடுவதை ஒரு வேளையாகவே இன்று பலரும் செய்து வருகின்றனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ரீல்ஸ் வெளியிடுவதை தாண்டி, எக்ஸ்
வலைதளம், திரெட், யூடியூப் போன்றவற்றிலும் ரீல்ஸ் வெளியிட்டு, தங்களை
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வைத்துக் கொள்கின்றனர். இந்த வகையில், பீகாரில்
பேராசிரியை ஒருவர் வெளியிட்ட ரீல்ஸ், அந்த மாநிலத்தில் கடும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
பாடலிபுத்ரா பல்கலைக்கழகத்தில்
பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவர், மாணவ, மாணவிகளின் விடைத்தாள்களை
திருத்தும்போது ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவ,
மாணவிகள் எழுதிய பதில்களை மேலோட்டமாக கூட படித்துப் பார்க்காமல்,
அவற்றுக்கு மதிப்பெண் வழங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு
மாணவரோ, மாணவியோ பல நாட்கள் படித்து, 3 மணி நேரம் எழுதிய தேர்வுத்தாளை
வெறும் 30 நொடிகளில் திருத்தி முடிப்பது அநியாயம் என்று பலரும் கருத்து
தெரிவித்துள்ளனர்.
மாணவ, மாணவிகளின் உழைப்பை அந்த பேராசிரியை கொச்சைப்படுத்திவிட்டதாக
பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதே பேராசிரியை முன்னொரு முறையும்
இதேபோல், விடைத்தாள் திருத்தும் பணியின்போது ரீல்ஸ் வெளியிட்ட காட்சியும்
வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்டில் கோபத்தை கொட்டியுள்ள
நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க
உத்தரவிட்டனர். அதன்படி, ரீல்ஸ் வெளியிட்ட பேராசிரியை மீது முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், அவரது பெயர்
இதுவரை வெளியிடப்படவில்லை.
No comments