Breaking News

சிம் கார்டுக்கு லாக் போடுவது அவ்வளவு முக்கியமா.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

 


 

உங்கள் சிம் கார்டுக்கு பின் (PIN) அமைப்பது, உங்கள் ஸ்மார்ட்போனின் தரவுகளைப் பாதுகாப்பதில் முக்கியமான விஷயமாகும்.

பல பயனர்கள் தங்கள் சாதனங்களைப் பாதுகாக்க பயோமெட்ரிக் லாக், பின் மற்றும் பாஸ்கோட் ஆகியவற்றை நம்பி இருக்கும்போது, சிம் கார்டு தகவல்களை பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. உங்கள் சிம் கார்டுகளை அகற்றிவிட்டு மற்றொரு ஃபோனில் அவற்றை உபயோகப்படுத்தினால் அவர்களும் உங்கள் சிம் கார்டு விவரங்களை பார்க்கலாம். குறிப்பாக பில்லிங் விவரங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகள், OTP-கள் போன்ற முக்கியமான தரவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தப் பதிவில் உங்கள் சிம் கார்டை எவ்வாறு லாக் செய்து வைப்பது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் போனுக்கு லாக், பயோமெட்ரிக் மற்றும் பாஸ்வோர்ட் அமைப்பது எந்த விதத்திலும் உங்களுடைய சிம் கார்டு டேட்டாவை பாதுகாக்கும் என்று சொல்ல முடியாது. இன்று பலரும் ஒவ்வொரு ஆப்-க்கும் ஒவ்வொரு பாஸ்வேர்ட் போட்டு அனைத்து டேட்டாக்களையும் பாதுகாக்கின்றனர். என்னதான் நீங்கள் மற்ற விவரங்களுக்கு பாஸ்வேர்ட் போட்டாலும் உங்களுடைய சிம் கார்டு விவரங்களை அது பாதுகாக்கும் என்று கூற முடியாது. உங்கள் சிம் கார்ட் விவரங்களை பாதுகாக்க நீங்கள் சிம்கார்டுக்கு என்று பிரத்தியேகமாக பின் அமைக்க வேண்டும்.

சிம் பின் லாக் ஆக்டிவேட் ஆனதும், ஒவ்வொரு முறையும் உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யும் போது அல்லது சிம்மை வேறொரு டிவைஸில் பயன்படுத்தும் போது, அது சிம் பின்னைக் கேட்கும். இதனால் உங்கள் சிம் கார்டை வைத்து மற்றவர்கள் உங்கள் டேட்டாக்களைத் திருடும் ஆபத்து குறைகிறது.சிம் பின்னை அமைத்துவிட்டு, நீங்கள் மறந்து விட்டால் வாடிக்கையாளர் சேவையை அணுகுவது அவசியம். உங்கள் சிம் கார்டை மீண்டும் பாஸ்வேர்ட் இல்லாமல் திறக்க PUK (PIN Unlock Key) குறியீட்டைப் பெற்று அதைப் பயன்படுத்தி சிம் கார்டை அன்லாக் செய்ய முடியும். சிம் கார்டு பின்னை எவ்வாறு அமைப்பது?: ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் "Settings"-இல் உள்நுழைந்து "Security" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 2: அதன் பிறகு "Other security settings" அல்லது "More security settings" என்பதைக் கிளிக் செய்யவும். ஸ்டெப் 3: தற்போது "SIM card security" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டெப் 4: தற்போது உங்கள் சிம் கார்டுடன் தொடர்புடைய டிஃபால்ட் பின் நம்பரை என்டர் செய்யவும். உங்கள் சேவை வழங்குனரை பொறுத்து இந்த டீஃபால்ட் பின் நம்பர் இருக்கும்.

உதாரணமாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் டிஃபால்ட் பின் நம்பராக 1234 என்பதைப் பயன்படுத்தலாம். வோடபோன் வாடிக்கையாளர்களாக இருந்தால் அவர்கள் 0000 என்ற நம்பரைப் பயன்படுத்தலாம். இதுபோல உங்களுடைய சேவை வழங்குனருக்கு ஏற்றார் போல் டிஃபால்ட் பின் நம்பரை என்டர் செய்யவும். ஸ்டெப் 5: அதன் பிறகு "Change SIM card PIN" என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களுடைய சேவை வழங்குனரின் பின்னை என்டர் செய்து வெரிஃபை செய்த பிறகு, நீங்கள் பயன்படுத்த இருக்கும் பின் நம்பரை என்டர் செய்து "Save" செய்யவும்.

No comments