Breaking News

ITR தாக்கல் செய்யப்போறீங்களா.. ஜூன் 15 வரை காத்திருப்பது நல்லது..!! ஏன் தெரியுமா..?!

 

2023-24 நிதியாண்டுக்கான (கணக்கீடு ஆண்டு 2024-25) வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான இ-பைலிங் முறை தொடங்கப்பட்டுள்ளது.

வரி தாக்கலை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில் இ-பைலிங் தளத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுப் பல கோடி மக்களை எதிர்பார்த்து வருமான வரித்துறை காத்திருக்கிறது.இந்த நிலையில் வருமான வரித்துறை, மாத சம்பளக்காரர்கள் பயன்படுத்தப்படும் ஐடிஆர் படிவங்கள் விபரத்தை வெளியிட்டதோடு, வருமான வரி தாக்கல் செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் கதவுகளைத் திறந்தது.இதனால் மாத சம்பளக்காரர்கள் பலர் ஆர்வமாக முன்கூட்டியே வரி ரீபண்ட் தொகையைப் பெற தாக்கல் செய்ய துவங்கியுள்ளனர். ஆனால் ஜூன் 15 வரை காத்திருந்து வருமான வரி தாக்கல் செய்வது சிறந்தது என கருத்து நிலவுகிறது. இதற்கு என்ன காரணம்..?!தனிநபர்கள் தங்களுடைய வருமான வரி தாக்கல் செய்ய ஏப்ரல் 1ஆம் தேதியே ஐடிஆர் படிவங்கள் கிடைத்தாலும், சம்பளம் பெறுபவர்கள் வரி தாக்கலை ஜூன் 15 வரை தள்ளி வைப்பது நல்லது. ஏனென்றால், அவர்களது வருடாந்திர தகவல் அறிக்கைகள் (AIS) மற்றும் பார்ம் 26AS ஆகியவை பொதுவாக மே 31ம் தேதியில் தான் முழுமையாக அப்டேட் செய்யப்படுகின்றன.மேலும், சம்பளம் பெறுபவர்களுக்கு, தங்கள் TDS சான்றிதழ்கள் மே 31ம் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வழங்கப்படுகின்றன.

சில தகவல்கள் மே 31ம் தேதிக்கு முன்பே AIS மற்றும் பார்ம் 26AS இல் காட்டப்படத் தொடங்கலாம் என்றாலும், பொதுவாக முந்தைய நிதிய ஆண்டின் கடைசி காலாண்டிற்கான தகவல்கள் மே 31ம் தேதி வரையில் அப்டேட் செய்யப்பட அனுமதிக்கப்படுகிறது.இந்த நிலையில் மே 31 ஆம் தேதிக்கு முன்பே ITR தாக்கல் செய்தால், முழுமையற்ற தகவல்களின் அடிப்படையில் வரி தாக்கல் செய்ய கூடும். வரி செலுத்துபவர்கள், தவறவிடப்பட்ட தகவல்கள் காரணமாக வருமானம் குறைவாகக் காட்டப்பட்டால், இதனால் வருமான வரித்துறையினர் அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ஜூன் 15 வரை காத்திருப்பது நல்லது.வருமான வரி தாக்கலுக்கான முக்கிய தகவல்கள்: மே 31ம் தேதிக்குள் AIS, பார்ம் 26AS ஆகியவை முழுமையாக அப்டேட் செய்யப்பட வாய்ப்பில்லை. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் துறைக்கு நிதி பரிவர்த்தனை அறிக்கையை (SFT) தாக்கல் செய்ய வேண்டும்.நிதி பரிவர்த்தனை அறிக்கை (SFT) என்றால் என்ன?: நிதி பரிவர்த்தனை அறிக்கைகள் என்றால், வருமான வரி செல்லும் மக்கள் ஒரு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை வருமான வரித் துறைக்கு வழங்கும் ரிப்போர்ட்.இந்த அறிக்கையில் பங்கு வருமானம், மியூச்சுவல் ஃபண்டுகள், டிவிடெண்டுகள், சேமிப்பு கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டி, நிலையான வைப்புத்தொகைகள், பப்ளிக் ப்ராவிடென்ட் பண்ட், கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்கள் போன்ற பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளன.நிறுவனங்கள் SFT அறிக்கை தாக்கல் செய்த பிறகு, வரி செலுத்துபவர்களுக்குக் அப்டேட் செய்யப்பட்ட வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) கிடைக்கும்.வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) என்றால் என்ன?: வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் நிதி பரிவர்த்தனை குறித்த தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தத் தகவல்களைக் கொண்டுதான் வருமான வரித் துறை, ஒவ்வொரு நபருக்கும் வருடாந்திர தகவல் அறிக்கையை (AIS) வழங்குகிறது.ஒருவரின் மொத்த சம்பள வருமானம் மற்றும் அதிலிருந்து பிடிக்கப்பட்டு, வருமான வரித்துறைக்குச் செலுத்தப்பட்ட வரி ஆகிய தகவல்கள் அடங்கிய அறிக்கை தான் இந்த AIS.வங்கி வட்டி: சேமிப்பு கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானம் AIS இல் காட்டப்படும். இந்த வட்டி வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.பிற வருமானங்கள்: பங்கு வருமானம், மியூச்சுவல் பண்டுகள், டிவிடெண்டுகள் போன்ற பிற வருமானங்கள் குறித்த தகவல்களும் AIS இல் இடம் பெறலாம். இதுபோன்ற வருமானங்களுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கலாம்.வருமான வரி தாக்கல் செய்யும்போது, உங்கள் வருமானம் குறித்த சரியான தகவல்களை முழுமையாகக் கொடுப்பது அவசியம். AIS இல் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் வரி வருமானத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இதன் மூலம், வரி செலுத்துவதில் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும், வரி கணக்கீடு செய்வதற்கும், வரி தாக்கல் செய்வதற்கும் AIS உங்களுக்கு பெரிதும் உதவும்.

No comments