Breaking News

இதுவரை பார்க்காத கனமழை பார்க்க போறீங்க..! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை அப்டேட்..!

 


கோடை வெயிலில் வெந்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வரமாக வந்தது கோடை மழை.கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்து பூமியை குளிரச் செய்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்திருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இன்று டெல்டா மாவட்டங்களிலும், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் புயல் காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.கரூர்- நாமக்கல் பெல்ட், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

அதேபோல, சென்னையில் கனமழை பெய்யப் போக உள்ளது. அடுத்த 2 - 3 தினங்களுக்கு ரெயின்கோட்டை மறந்து விடாதீர்கள்" என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

No comments