பரோட்டாவில் ருசி அதிகம்தான்.!! ஆனால், அதைவிட ஆபத்துக்களும் அதிகம்!!
தமிழ்நாட்டு மக்களின் முக்கிய உணவுகளில் பரோட்டாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இதற்கு காரணம் அதன் ருசிதான்.
மைதா மாவினால் தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் நம் ஊர்களில் கிழி பரோட்டோ, பன் பரோட்டா என பல வகைகளில் கிடைக்கிறது. எல்லா பகுதிகளிலும் மக்களை கவர்ந்த ஒரு உணவாக பரோட்டா திகழ்கிறது. மக்களையும் பரோட்டாவையும் பிரிக்க முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால், பரோட்டாவில் உள்ள தீமைகள் குறித்து நாம் என்றாவது சிந்தித்து உண்டா?இல்லையெனில் இப்போ தெரிஞ்சிக்கோங்க.
பரோட்டோ சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
அதிகளவில் பரோட்டா சாப்பிடுவது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது.
ஆனால்,
மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட
உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு
கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே. இதனால், மைதா உணவுகளை
தவிர்ப்பது சாத்தியமில்லை. மாலை வேளையில் தேநீருடன் எடுத்துக்கொள்ளும்
பிஸ்கட், சமோசா, பகோடா, ரஸ்க், பப்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் மைதா உள்ளது.
தினசரி நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை ஏதேனும் ஒரு வகையில்
எடுத்துக்கொள்கிறோம்.
மைதா மாவால் ஏற்படும் தீமைகள்:
1)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் இதில் மைதாவில் கலக்கப்படும் அல்லோக்ஸான், சர்க்கரை நோயாளிகளின் கணையத்தை நேரடியாக பாதிக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் பரோட்டா சாப்பிடக்கூடாது. மேலும் மைதாவில் தயாரிக்கப்படும் எதையும் சாப்பிடக்கூடாது.
2) மைதா அதிக அளவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் கொண்டவை. பரோட்டா, சோலே பட்டூரா, பிஸ்கட்டுகள், பலகாரங்கள் ஆகியவற்றில் கூடுதல் எண்ணெய், இனிப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.
3) மைதாவில் நார்சத்து இல்லை. இதனால், ரத்த சர்க்கரை அளவை உடனே அதிகரிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4) மைதா உணவுகள் எடையை அதிகரிக்கச் செய்யும். எடை அதிகமான பெண்களுக்கு, மாதவிடாய் தள்ளிப்போவது உட்பட பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
No comments