Breaking News

பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு? குழப்பத்தில் மாணவர்கள்!

 

மிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி தொடங்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

கோடை வெப்பத்தின் தாக்கத்தாலும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன்4 ம் தேதி வெளியிடப்படுவதாலும் 6ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பை மேலும் சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

தமிழகத்தில் பரவலாக பல இடங்களிலும் கோடை கனமழை பெய்துள்ளது. மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நிலையற்ற வானிலை நிலவுவதாலும், ஜூன் 6ம் தேதி வியாழக்கிழமை பள்ளி தொடங்கப்பட்டால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளி செயல்படும். ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவைகளை கருத்தில் கொண்டு ஜூன் 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதில் மாற்றம் ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளிகள் திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் வரலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments