Breaking News

சிபில் ஸ்கோர் என்றால் என்ன ? குறைந்த கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது எப்படி..?

 


ங்கிகளில் கடன் வாங்குவதற்கு சிபில் மதிப்பெண் நன்றாக இருப்பது மிகவும் முக்கியம்.

சிபில் ஸ்கோர் என்பது உங்கள் நிதி நிலையின் வலிமையைக் குறிக்கிறது.

ஆனால் உங்கள் சிபில் ஸ்கோரை நிறைய காரணிகள் பாதிக்கலாம். வங்கிக் கடன் பெறுவதற்கு முன்னர் உங்களுடைய சிபில் ஸ்கோரை மேம்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

முதலில் உங்கள் கடன் அறிக்கையை சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் சிபில் மதிப்பெண்ணைக் குறைக்கும் ஏதேனும் தவறான தகவல் உள்ளதா எனப் பார்க்க முடியும். தாமதமாக பணம் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். கிரெடிட் கார்டு பில்களாகவோ அல்லது கடன் EMI ஆகவோ உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது நல்லது.

உங்கள் கடன் வரம்பில் 30 சதவீதத்துக்கும் குறைவாக பயன்படுத்த வேண்டும். அதிக கிரெடிட் கார்டு பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். ஒவ்வொரு முறையும் கடனுக்கு விண்ணப்பித்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். எனவே தேவைக்கேற்ப மட்டுமே கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அடிக்கடி விண்ணப்பித்தாலோ அல்லது கடன் வாங்க முயற்சித்தாலோ பின்னடைவு ஏற்படும்.

பல்வேறு வகையான கிரெடிட்களைப் பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம். ஆனால் கவனமாக இருக்க வேண்டும். உங்களால் திருப்பிச் செலுத்தக்கூடிய கடனை மட்டும் வாங்குவது நல்லது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருந்தால் நிதி ஆலோசகரை சந்திக்கலாம். அவர்கள் உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். மேலும் உங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்துவதற்கான உத்தியை அவர்கள் உருவாக்குவார்கள்.

கிரெடிட் ஸ்கோரை குறைந்த அளவிலிருந்து சரியான முறையில் அதிகரிக்க

உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது முக்கியம். உங்கள் கட்டணம் தானாகச் செலுத்தும் முறையை பின்பற்றுங்கள். ஒரு பேமெண்ட் தவறினால் கூட உங்கள் ஸ்கோரை அது குறைக்கலாம்.

நீங்கள் ஒன்றுக்கும்மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தால் அதில் ஒன்றை மட்டும் வைத்துவிட்டு மற்ற கார்டுகளை மூடிவிடுவது நல்லது. ஏனெனில் அதிக கடனும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் அதிக அளவில் அதிக மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு வேளை நீங்கள் அதிக கடனை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கினாலும் உங்கள் ஸ்கோர் குறையும் அபாயத்திர்கு கொண்டு செல்லும்.

உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் ஏற்படும் தவறுகள் உங்களை அறியாமலேயே உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம். உங்கள் கிரெடிட் அறிக்கையை தவறாமல் சரிபார்ப்பது, ஏதேனும் பிழைகளை விரைவாகக் கண்டறிந்து சிபிள் ஸ்கோரிடம் ரிப்போர்ட் செய்து சரி செய்து கொள்வதும் அவசியம்.

ஒரு வேளை உங்களுக்கு பணத்தேவை இருந்தால் வங்கிகளை மட்டுமே நம்பி இருக்காமல், உங்களிடம் உள்ள தங்க நகையை வைத்து கடனை வாங்கவும். அப்படி செய்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்காது.

No comments